இன்று வெளியாகும் டான் படத்தின் ட்ரெயிலர்... தொடர் ட்ரெண்டிங்கில் ட்ரெயிலர்!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ஷிவாங்கி, பால சரவணன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் டான். டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து லைகா புரொடக்ஷன்சுடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், ஷிவாங்கி, பால சரவணன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 13ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது டான் படம். இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் தயாரிப்பு
டாக்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இந்தப் படத்தையும் தயாரித்துள்ளார் சிவகார்த்திகேயன். படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து அவர் தயாரித்துள்ளார். படத்தை அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன.

ஷிவாங்கி அறிமுகம்
இந்தப் படத்தின்மூலம் குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி நடிகையாக அறிமுகமாகியுள்ளார். படம் வெளியாக இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. பல பேட்டிங்கள் உள்ளிட்டவற்றை படக்குழு கொடுத்து வருகிறது.

ட்ரெயிலர் வெளியீடு
இந்நிலையில் இன்று மாலை படத்தின் ட்ரெயிலர் வெளியீடு பிரபல கல்லூரியில், மாணவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட உள்ளது. கல்லூரி வாழ்க்கையை மையமாக கொண்டு கதைக்களம் உள்ள நிலையில், இவ்வாறு ட்ரெயிலர் வெளியிடுவது மிகவும் பொருத்தமான ஒன்றாக காணப்படுகிறது.

கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன்
இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், இதற்காக சில கெட்டப் மாற்றங்கள் மட்டுமே செய்ததாகவும் மற்றபடி பெரிதாக மெனக்கெடவில்லை என்றும் சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார். படத்தில் அவருக்கு பள்ளி மாணவர் கெட்டப்பும் உள்ளதாம்.

இளைஞனின் கல்லூரி வாழ்க்கை
காமெடியை கதைக்களமாக கொண்டு படம் உருவாகியுள்ளது. படத்தில் பெரிய அளவில் மாஸ் சீனை எல்லாம் எதிர்பார்த்து வராதீங்க என்று முன்னதாக சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். சாதாரண இளைஞனின் கல்லூரி கால வாழ்க்கையை அதை தொடர்ந்த பயணத்தை இந்தக் கதை மையமாக கொண்டு உருவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ட்ரெயிலர்
இன்று மாலை படத்தின் ட்ரெயிலர் வெளியாகவுள்ள நிலையில், ட்விட்டர் ட்ரெண்டிங்கில் தொடர்ந்து டான் ட்ரெயிலர் உள்ளது. இயல்பான கேரக்டர்களில் தொடர்ந்து நடித்துவரும் சிவகார்த்திகேயனுக்கு என்று பெரிய ரசிகர்கள் வட்டம் காணப்படுகிறது. இதில் இந்த ட்ரெயிலர் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளதில் வியப்பு இல்லை.


Click it and Unblock the Notifications











