தீபாவளி தினத்தில் யோகி பாபுவுக்கு கிடைத்த சூப்பர் பரிசு… ரசிகர்கள் வாழ்த்து
சென்னை: தமிழ்த் திரையுலகில் முன்னணி காமெடி நடிகரான யோகி பாபுவுக்கு 2020ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்ட யோகி பாபுவுக்கு விசாகன் என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், தீபாவளி தினமான இன்று யோகி பாபுவின் வீட்டில் இரட்டிப்பு விசேஷ தினமாக மாறியுள்ளது.

காமெடி சூப்பர் ஸ்டார்
சின்ன சின்ன கேரக்டர்கள் ஏராளமான படங்களில் நடித்துள்ள யோகி பாபு, இன்று தமிழ்த் திரையுலகின் தவிர்க்க முடியாத காமெடி நடிகனாக கலக்கி வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினி, விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு சூப்பரான காமெடி பார்ட்னராக கலக்கி வரும் யோகி பாபுவின் கால்ஷீட் கிடைப்பதே இன்று கஷ்டமாகிவிட்டது. அதுமட்டும் இல்லாமல் கூர்கா உள்ளிட்ட சில படங்களில் ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.

பாடி லேங்குவேஜில் அசத்தல்
யோகி பாபுவின் முடியை பலரும் கேலி செய்தார்களாம். அவரோ அதையே தனது ப்ளஸாக மாற்றி இன்று சிக்ஸர்களாக வெளுத்து வருகிறார். யோகி பாபுவின் ஒருநாள் சம்பளம் மட்டுமே 8 லட்சம் எனக் கூறப்படுகிறது. கவுண்டர், பாடி லேங்குவேஜ் என வெரைட்டியாக காமெடி செய்வதில் வடிவேலுவுக்கு பின்னர் யோகி பாவுவும் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கியுள்ளார். அதனால், யோகி பாபுவின் காமெடிக்கு ரசிகர்களிடம் எப்போதுமே வரவேற்பு அதிகமாக உள்ளது.

இரட்டிப்பு மகிழ்ச்சி
சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜெயிலர், விஜய்யுடன் வாரிசு, ஷாருக்கானுடன் ஜவான் என டாப் ஹீரோக்களுடன் பிஸியாக நடித்து வருகிறார் யோகி பாபு. இதனிடையே, 2020ம் ஆண்டு மஞ்சு பார்கவி என்பவரை திருமணம் செய்துகொண்ட யோகி பாபுவுக்கு, விசாகன் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், இன்று அவருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. தீபாவளி தினத்தில் இரண்டாவது குழந்தைக்கு அப்பாவாகியுள்ள யோகி பாபுவுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் யோகி பாபுவுக்கு குழந்தை பிறந்துள்ளதாக கூறப்படுகிறது.

கதை, திரைக்கதை
தீபாவளி தினத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கும் யோகி பாபு, விரைவில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ரமேஷ் சுப்பிரமணியம் இயக்கும் இந்தப் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியது யோகி பாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கிவிட்ட நிலையில், விரைவில் அடுத்தடுத்து மேலும் சில அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, யோகி பாபுவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











