»   »  ராமதாஸுக்காக விஜய் சேதுபதியின் தர்மதுரை ஸ்பெஷல் ஷோ

ராமதாஸுக்காக விஜய் சேதுபதியின் தர்மதுரை ஸ்பெஷல் ஷோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நடித்துள்ள தர்மதுரை படம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்காக சிறப்பாக போட்டுக் காண்பிக்கப்பட்டுள்ளது.

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, தமன்னா, ஐஸ்வர்யா ராஜேஷ், சிருஷ்டி டாங்கே, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் தர்மதுரை. இந்த படம் வரும் 19ம் தேதி ரிலீஸாக உள்ளது.

Dr. Ramadoss watches Dharmadurai premier show

படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தர்மதுரை படப் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படக்குழுவினர் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோருக்காக தர்மதுரையை பிரத்யேகமாக போட்டுக் காண்பித்துள்ளனர்.

Dr. Ramadoss watches Dharmadurai premier show

இந்த சிறப்பு காட்சியின்போது விஜய் சேதுபதி, சீனுராமசாமியும் அங்கிருந்தனர். படத்தை பார்த்த மூவரும் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்கும் விஜய் சேதுபதியின் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவர் பூர்த்தி செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
PMK founder Dr. Ramadoss watched Vijay Sethupathy's Dharmadurai premier show in Chennai.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil