For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  நம்ம சேதுவா.. நம்பவே முடியலையே.. இது வதந்தியா இருக்கக் கூடாதா.. அதிர்ந்து போன திரையுலகம்!

  By
  |

  சென்னை: 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' படத்தில் நடித்த நடிகரும் டாக்டருமான சேது என்கிற சேதுராமன் நேற்று திடீரென உயிரிழந்தார். அவருக்கு வயது 36. அவரது மரணத்தால் தமிழத் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகமும் நேற்று இரவு அதிர்ந்து போனது.

  Actor & Dr.Sethu Raman Passed Away |Santhanam | Kusboo| Arav | Athulya Condolence

  ரொம்ப சின்ன வயதில் மாரடைப்பு என்பது தமிழக மக்கள் அதிர்ச்சியாகவே பார்க்கின்றனர். தமிழில் வெளியான, கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் சேது. ஸ்கின் டாக்டர்.

  அவரது முதல் படத்தில் சந்தானம், பவர் ஸ்டார் சீனிவாசன், விசாகா சிங் உட்பட பலர் நடித்திருந்தனர். 3 பேர் கொண்ட சப்ஜெக்ட் என்றாலும் கடைசியில் சேதுவைத்தான் நாயகி செலக்ட் செய்வது போல கதை வடிவமைக்கப்பட்டிருக்கும்.

  அதிர்ச்சியாகவும் மன அழுத்தமாகவும் உள்ளது.. நெருங்கிய நண்பனின் மரணத்தால் நொறுங்கிப்போன சந்தானம்!

   ஹேண்ட்மேட் பிலிம்ஸ்

  ஹேண்ட்மேட் பிலிம்ஸ்

  மணிகண்டன் இயக்கிய இந்தப் படம் கவனிக்கப்பட்டது. தயாரிப்பாளர் ராம நாராயணனுடன் இணைந்து நடிகர் சந்தானமும் தனது ஹேண்ட்மேட் பிலிம்ஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் சேதுவின் நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து, அவர் வாலிப ராஜா என்ற படத்தில் சேது ஹீரோவாக நடித்தார். இதிலும் சந்தானம், விசாகா சிங் ஆகியோர் நடித்திருந்தனர்.

   சக்கப்போடு போடுராஜா

  சக்கப்போடு போடுராஜா

  சாய் கோகுல் ராம்நாத் இயக்கி இருந்த இந்தப் படத்தை எச்.முரளி தயாரித்திருந்தார். இந்தப் படமும் கவனிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர் சந்தானத்தின் சக்கப்போடு போடுராஜா என்ற படத்தில் நடித்திருந்தார். சேதுராமன் இயக்கி இருந்த படத்தில் வைபவி ஷாண்டில்யா, சம்பத் ராஜ், விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்திருந்தனர்.

   தோல் மருத்துவ நிபுணர்

  தோல் மருத்துவ நிபுணர்

  அடுத்து கிருஷ்ண சாய் இயக்கிய 50/50 என்ற படத்தில் நடித்தார், சேது. இதில் ஸ்ருதி ராமகிருஷ்ணன், பால சரவணன், யோகிபாபு, தீனா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆனது. இதையடுத்து படங்களில் நடிக்காமல் இருந்த சேது, மருத்துவர் ஆவார். அவர் தோல் மருத்துவ நிபுணர். மும்பையிலும், சிங்கப்பூரிலும் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றுள்ளார்.

   மாரடைப்பு

  மாரடைப்பு

  சென்னையில் எம்.ஆர்.சி நகரில் உள்ள தனது வீட்டில் இருந்த சேதுராமனுக்கு நேற்று இரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் அவரைச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, திடீரென மரணம் அடைந்தார். மறைந்த சேதுவுக்கு மனைவி உமையாள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டுதான், நடிகர் சேது, உமையாள் திருமணம் நடந்தது.

   திரையுலகம் அதிர்ச்சி

  திரையுலகம் அதிர்ச்சி

  சேதுவின் திடீர் மரணம் குறித்து அவரது நண்பரும் காமெடி நடிகருமான சதீஷ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். சேதுவின் திடீர் மரணம் தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரது உடலுக்கு சிலர் அஞ்சலி செலுத்தினர். பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கொரோனாவைரஸ் அச்சுறுத்தலால், மக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கும் நிலையில் இவரது இறப்பு, சினிமா துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  English summary
  kanna lattu thinna aasaiya' actor Sethuruman who is also a very popular Dermatologist in Chennai has passed away following a massive cardiac arrest.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more
  X