twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம் படத்துக்கு செலுத்தப்பட்ட தொகை குறித்து வாயே திறக்காத டிடிஎச் நிறுவனங்கள்!

    By Shankar
    |

    சென்னை: விஸ்வரூபம் படத்தின் டிடிஎச் பிரிமியருக்காக செலுத்தப்பட்ட ரூ 1000 ஐ திருப்பித் தருவது குறித்தோ... வேறு தேதியில் படத்தை வெளியிடுவது குறித்தோ இதுவரை எந்த டிடிஎச் நிறுவனமும் வாயே திறக்கவில்லை.

    விஸ்வரூபம் படத்தை நாளை (ஜனவரி 10) இரவு 9.30 மணிக்கு டிடிஎச்சில் வெளியிடுவதாக உறுதியளித்து ஒவ்வொரு சந்தாதாரரிடமும் ரூ 1000 வசூலித்தனர்.

    ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், சன் டைரக்ட் மற்றும் டாடா ஸ்கை ஆகிய டிடிஎச் நிறுவனங்கள் விஸ்வரூபத்தை ஒளிபரப்ப கமலுடன் கைகோர்த்தன.

    ரொம்ப டல் புக்கிங்...

    ரொம்ப டல் புக்கிங்...

    விஸ்வரூபம் படம் தியேட்டர்களில் ரிலீசுக்கு முன்பே டிவியில் வந்துவிடும் என்று விளம்பரப்படுத்தினால் வசூல் குவியும் என்று அத்தனை டிடிஎச் நிறுவனங்களும் வாயைப் பிளந்து கொண்டிருந்தன. ஆனால் நடந்தது வேறு. சில ஆயிரம் பேர்கள்தான் இந்த டிடிஎச் முறையில் பணம் செலுத்தினர்.

    எத்தனை ஆயிரம் பேர்?

    எத்தனை ஆயிரம் பேர்?

    சரி ஒவ்வொரு டிடிஎச்சிலும் எத்தனை ஆயிரம் பேர் பணம் கட்டினார்கள் என்ற விவரம் கேட்டால் ஒருவரும் வாய் திறக்க மறுத்துவிட்டனர். புக்கிங்குக்கு கடைசி தேதி ஜனவரி 8. அன்று வரை தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரு முக்கிய டிடிஎச்சில் 3000 பேர் மட்டும்தான் சப்ஸ்க்ரைப் செய்திருந்தார்களாம் விஸ்வரூபத்துக்கு.

    இப்போ என்ன சொல்றாங்க?

    இப்போ என்ன சொல்றாங்க?

    எப்படிப் பார்த்தாலும் விஸ்வரூபத்துக்கு டிடிஎச் மூலம் ரூ 10 கோடி கூட வசூலாகாது என்ற நிலை. வேறு வழியின்றி தியேட்டர்களைச் சரணடைந்தார் கமல். டிடிஎச் ஒளிபரப்பு நின்று போனது. இந்த விஷயம் கடந்த 36 மணி நேரமாக பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால் பணம் வசூலித்த டிடிஎச் நிறுவனங்களோ கல்லுளி மங்கன் கணக்காக அமைதி காத்தன.

    எஸ்எம்எஸ் வரும்...

    எஸ்எம்எஸ் வரும்...

    விஸ்வரூபம் குறித்த செய்திகளைப் படித்துவிட்டு டென்ஷனான சந்தாதாரர்களோ, படம் நின்னுடுச்சா.. எங்க பணம் என்னாச்சு.. என தொடர்ந்து விசாரிக்க ஆரம்பித்தனர். இதற்கு டிடிஎச் நிறுவனங்கள் சொன்ன பதில்... 'எஸ் எம் எஸ் வரும்' என்பதுதான்.

    பணத்தை திருப்பித் தர முடியாது

    பணத்தை திருப்பித் தர முடியாது

    சில டிடிஎச் நிறுவனங்கள் அடாவடியாக, படம் இப்போது இல்லை. ஆனால் பணத்தை திருப்பித் தர முடியாது. வேறொரு நாளில் படம் வரும். அதுவரை வெயிட் பண்ணுங்க என்றன.

    மாத கட்டணத்தில் கழிக்க முடியாது

    மாத கட்டணத்தில் கழிக்க முடியாது

    'சரி.. எனக்கு விஸ்வரூபம் படமே வேணாம். நான் கொடுத்த 1000 ரூபாயை என் மாத கட்டணத்தில் கழித்துக் கொள்ளுங்கள்', என்று சிலர் கூறியபோது, "அதெல்லாம் முடியாது. விஸ்வரூபத்தை இன்னொரு நாள் போடுவோம். அன்றைக்கு பார்த்துக் கொள்ளுங்கள். அப்படித்தான் இந்தத் தொகையை கழிக்க முடியும்" என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளனர்.

    ஏர்டெல்

    ஏர்டெல்

    விஸ்வரூபம் நிறுத்தப்பட்டது குறித்து டிடிஎச்களில் ஏர்டெல்தான் முதலில் அறிவித்தது. அந்த அறிக்கையில், "விஸ்வரூபம் டிடிஎச்சில் வெளியாகாது. புக்கிங்கை நிறுத்திவிட்டோம். இந்தப் படம் முதலில் தியேட்டர்களில் வெளியாகிறது. பின்னர்தான் டிடிஎச்," என்று அறிவித்துள்ளார் அந்த நிறுவனத்தின் சசி அரோரா. கவனிக்க.. மறுதேதி குறித்தோ, பணத்தை திருப்பித் தருவது குறித்தோ மனிதர் வாயே திறக்கவில்லை!

    டாடா ஸ்கை

    டாடா ஸ்கை

    டாடா ஸ்கை நிறுவனத்தின் அறிவிப்பு இப்படி இருந்தது: "விஸ்வரூபம் படத்தின் தயாரிப்பாளர் அதன் வெளியீட்டைத் தள்ளி வைக்க தீர்மானித்துள்ளார். எனவே நாங்களும் டிடிஎச்சில் படம் வெளியிடுவதைத் தள்ளி வைத்துள்ளோம்."

    -இவர்களும் வசூலித்த பணம் குறித்து பேசவே இல்லை.

    ரிலையன்ஸ்..

    ரிலையன்ஸ்..

    இவர்கள் ரொம்ப நல்லவர்கள். "விஸ்வரூபம் படம் டிடிஎச்சில் வெளியாவது குறித்து விரைவில் தெரிவிப்போம். அதுவரை வாடிக்கையாளர்கள் இதுகுறித்து எந்த விசாரிப்பும் மேற்கொள்ள வேண்டாம்!"

    கமல் பேரமைதி...

    கமல் பேரமைதி...

    கமல் ஹாஸன் என்ற ஒரு கலைஞனை நம்பித்தான் இத்தனை பேர் பணம் கட்டினார்கள் டிடிஎச்சுக்கு. ஆனால் அந்த மனிதர், இந்த நிமிடம் வரை தன்னை நம்பி பணம் கட்டியவர்களுக்காக ஒரு வார்த்தை கூட இன்னும் பேசவில்லை என்பதுதான் சந்தாதாரர்களை பெரும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.

    English summary
    None of the DTH companies have informed their subscribers about the refund of payment for Viswaroopam and next possible date of telecast of the movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X