twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பொய் அல்ல உண்மை, பட்டியலை வெளியிட்ட சின்மயி: என்ன செய்யப் போகிறார் ராதாரவி?

    By Siva
    |

    Recommended Video

    பொய் அல்ல உண்மை, பட்டியலை வெளியிட்ட சின்மயி | பலாத்கார மிரட்டல்

    சென்னை: டப்பிங் யூனியனுக்கு எதிராக உள்ள வழக்குகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டுள்ளார் பாடகி சின்மயி.

    சின்மயி திரைப்பட டப்பிங் கலைஞர்கள் சங்கத்திற்கு கடந்த 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் தான் வாழ்நாள் முழுவதுக்கும் சந்தா செலுத்திவிட்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

    சந்தா

    டப்பிங் சங்கத்தில் உள்ள 95 உறுப்பினர்கள் கடந்த 2016ம் ஆண்டில் இருந்து சந்தா செலுத்தவில்லை. என்னை மட்டும் தான் நீக்கியுள்ளனர். இத்தனைக்கும் நான் பேங்க் டிரான்ஸ்பர் மூலம் 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதியே ஆயுட்களாக உறுப்பினர் கட்டணத்தை செலுத்திவிட்டேன்.

    டப்பிங் யூனியன்

    டப்பிங் சங்கத்தில் இருந்து தான் நீக்கப்பட்டதாகக் கூறி வந்துள்ள கடிதத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் சின்மயி. சந்தாவை செலுத்திவிட்டதாக கூறுகிறார் சின்மயி. இதற்கு டப்பிங் சங்க தலைவர் ராதாரவி என்ன விளக்கம் அளிக்கப் போகிறார்?

    நீதிமன்றம்

    டப்பிங் யூனியன் மீது 15 வழக்குகள் உள்ளதாக சின்மயி தவறான தகவலை ஊடகங்களில் தெரிவித்துள்ளதாக அவருக்கு வந்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை பார்த்த சின்மயி 15 அல்ல 16 வழக்குகள் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

    விளக்கம்

    டப்பிங் யூனியனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்குகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார் சின்மயி. மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு எஃப்.ஐ.ஆர். மற்றும் குற்றப்பத்திரிகையும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார் அவர்.

    English summary
    Singer Chinmayi has released the list of cases filed against Dubbing artistes union.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X