Dude: பிரதீப் ரங்கநாதன் குரலில் வெளியான சிங்காரி பாட்டு.. அடடே நல்லா இருக்கேப்பா!
சென்னை: அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்கும் டியூட் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் கதாநாயகனாக இயக்குநர் மற்றும் நடிகரான பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார். கதாநாயகியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் படத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் மூன்றாவது பாடல் வெளியாவது குறித்து நேற்றே அப்டேட் வெளியானது. இந்த பாடலை படத்தின் நாயகன் பிரதீப் ரங்கநாதன் தான் பாடியுள்ளார் என்று படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் பாடல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் படங்கள் இயக்குவதை காட்டிலும் நடிப்பில்தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் டியூட். இந்த படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. படமும் அக்டோபர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தீபாவளிக்கு இவரது லைக் படமும் வெளியாகவுள்ளது. அதற்கான பணிகளும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் கடைசியாக வெளியான டிராகன் படம் வசூல் மற்றும் விமர்சனத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படம் வசூலில் மட்டும் கிட்டத்தட்ட ரூபாய் 150 கோடிகள் வரை வசூல் செய்துள்ளது என்றும், இது மட்டும் இல்லாமல், ஓடிடி பிசினஸ் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபம் என்று திரைத்துறையில் பேச்சுகள் அடிபட்டது.
பிரதீப் ரங்கநாதன்: பிரதீப் ரங்கநாதன் தனது நடிப்பில் தனக்கென தனி பாணியை பின்பற்றி வருகிறார். கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் தொடங்கி அனைத்திலும் அவர் தனி கவனம் செலுத்தி வருகிறார். இது மட்டும் இல்லாமல், இவர் தனது முதல் படமான கோமாளி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அட்டோ ஓட்டுநராக நடித்திருந்தார். அதன் பின்னர் தனது இரண்டாவது படமான லவ் டுடே படத்தை இயக்கியது மட்டும் இல்லாமல், அந்த படத்தில் அவரே நடிக்கவும் செய்திருந்தார். இவரது இயக்கத்தில் வெளியான இரண்டு படங்களும் பிரமாண்டமான வெற்றியைப் பெற்றது. இந்த படத்திலேயே தனக்கு ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார்.
படக்குழு: இந்நிலையில் இவரது நடிப்பில் உருவாகி வரும் படம் டியூட். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் எழுதி இயக்குகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடிகை மமிதா பைஜூ நடிக்கிறார். இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்ளிட்ட பலர் படத்தில் நடிக்கிறார்கள்.
பாட்டு எப்படி இருக்கு: படம் தீபாவளிக்கு அதாவது வரும் அக்டோடபர் 17ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளதால் படத்தின் புரோமோசன் வேலைகள் வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது. இப்படி இருக்கும்போது இந்த படத்தின் மூன்றாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த பாடலை பிரதீப் ரங்கநாதன் பாடி உள்ளார். மேலும் இந்த பாடலுக்கான புரோமோவை படக்குழு ஏற்கனவே வெளியிட்டிருந்தது. சிங்காரி என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல் மெலடியாகவும் இல்லாமல் ஸ்பீடு பீட்டாகவும் இல்லாமல், இரண்டும் கலந்தது போல உள்ளது. மேலும் பாடல் வரிகள் ரசிக்கத்தகுந்த வகையில் உள்ளது என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











