பெரியவங்களுக்கு மரியாதை..ரீல்ஸ் போடுவது போல அல்ல..தவறான வார்த்தை விட்டு சிக்கிய ஜனனி
பிக் பாஸ் விவகாரத்தில் ரிவ்யூ மீட்டிங்கில் பேசிய ஜனனி தவறுதலாக சொன்ன ஒரு வார்த்தை அவருக்கே சிக்கலாக வந்து முடிந்துள்ளது.
முதல் நாள் நடந்த நிகழ்ச்சியில் ஜிபி.முத்து மீது வீண் பழி சுமத்தி வெளியேற்றியது பற்றி ஜனனியிடம் விளக்கம் சொன்னார் ஜி.பி.முத்து.

அனைத்து விஷயங்களை புரிந்து கொண்ட ஜனனி தனலட்சுமியை வெளியேற்றும்போது சொன்ன ஒரு வார்த்தையால் சிக்கியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தினசரி பட்டையை கிளப்பும் நிகழ்ச்சி என்றால் டாஸ்க் ரிவ்யூ மீட்டிங் தான். ஒரு பக்கம் டாஸ்க் கலந்து கொள்ளும் அணிகள் பற்றி மற்ற அணிகள் சொல்லி மார்க் போடும் நிகழ்ச்சி. அதிலும் காரசாரமான மோதல் நடப்பதை பார்க்கிறோம். மகேஸ்வரி அசீம் கடுமையாக மோதிக்கொண்டதையும், அசீம் கோபத்துடன் பாய்காட் செய்து வெளியேறியதையும் பார்த்தோம். அதேபோன்று ஜி.பி.முத்து மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு அவர் அடுத்த அணிகளுக்கு உதவி செய்கிறார் என்பது.
விவரம் புரியாத விக்ரமன்..ஜனனியை கார்னர் செய்த டீ
அணிக்குள் குழுவாக சேர்ந்து ஜிபி.முத்து எதிராக ஆயிஷாவும், தனலட்சுமியும் ஜனனியை தூண்டிவிட்டு அவரை வெளியேற்றிய பின் அவர் மறுநாள் ஜனனி சந்தித்து உண்மையை கூற ஜனனிக்கு ஒரு தெளிவு பிறந்தது அன்று இரவு மறுபடியும் பேசிய ஜனனி பெரியவர்கள் வயதானவர்கள் அனைவரும் அடங்கியது தான் இந்த பிக் பாஸ் வீடு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை போன்ற வீடு இது. இதில் வயதுக்கு மூத்தவர்கள் வா போ என்று பேசுவது பெரிதான விஷயம் அல்ல. அதை பற்றி பெரிதாக நாம் எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. இது ஒன்றும் 'ரீல்ஸ்' அல்ல ஒரே மாதிரியான வயது உள்ளவர்கள் பண்ண என்று வார்த்தையை விட அதற்கு அந்த நேரத்தில் பாராட்டு கிடைத்தது.
ஜனனியை காப்பாற்றிய அமுதவாணன்
அதன் பின்னர் தனலட்சுமியும், ஆயிஷாவும் ரீல்ஸ் போடுவதைப் பற்றி நீங்கள் எப்படி தவறுதலாக கூறலாம் என்று ஜனனியிடம் சண்டைக்கு நிற்க ஜனனி என்ன சொல்வது என்று தெரியாமல் திணறினார். ஜனனிக்கு தனலட்சுமி, ஆயிஷாக்கு ஆதரவாக விக்கிரமன் சேர்ந்து கொண்டு ஆமாம் ரீலீஸ் பற்றி எப்படி பேசலாம் என்று ஜனனியை கார்னர் செய்ய அங்கு ஆபத்பாந்தவனாய் வந்த அமுதவாணன் ஒரு சின்ன பெண்ணை மூன்று பேர் சேர்ந்து கார்னர் செய்கிறீர்களே எப்படி சரியாக இருக்கும் என்று கேட்டு ரீல்ஸ் என்று அவர் பொதுவாக சொல்லிருந்தால் தவறு நீ எந்த அர்த்தத்தில் சொன்னாய் என்று ஜனனியை கேட்க நான் ரீல்ஸ் என்று அந்த நானும் ரீல்ஸ் செய்திருக்கிறேன் அதை நான் தவறாக சொல்ல மாட்டேன் என்று மழுப்பினார்.
ரீல்ஸ் மேட்டருக்கு கமல் பதிலளிப்பாரா?
ஆனால் ரீல்ஸ் என்று அவர் தரக்குறைவாக பேசியது சிக்கலான ஒரு விஷயம் தாம். இந்த பிரச்சனை தனியாக ஓடுகிற,து சனிக்கிழமை கமல்ஹாசன் வந்து தீர்த்து வைத்தால்தான் இதற்கு தீர்வு கிடைக்கும். ஆனாலும் ஜனனி சிறு வயது பெண் என்பதால் பிக்பாஸ் போன்ற பொது நிகழ்ச்சிகளில் பேசும் வார்த்தைகளில் கவனம் இல்லாமல் இதுபோல் சிக்கிக் கொண்டது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது. இதேபோன்று பிக்பாஸ் வீட்டில் அடிக்கடி லூசு, பைத்தியம் போன்ற வார்த்தைகளும் பயன்படுத்தப்படுகிறது இதுவும் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.


Click it and Unblock the Notifications











