twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹீரோயினை பார்த்தாலே ஈபிள் டவர்தான்.. இனி என்ன செய்யலாம்? நடிகர் சிரஞ்சீவி வீட்டில் அவசரக் கூட்டம்!

    By
    |

    ஐதராபாத்: லாக்டவுனுக்கு பிறகு படப்பிடிப்புகளை நடத்துவது குறித்து நடிகர் சிரஞ்சீவி வீட்டில் தெலுங்கு திரையுலகினர் இன்று அவசரக் கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

    கொரோனா காரணமாக, பிறப்பிக்கப்பட்ட லாக்டவுனை அடுத்து சினிமா படப்பிடிப்புகள் மொத்தமாக நிறுத்தப்பட்டுள்ளன.

    இதனாலும் தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்பதாலும் சினிமாதுறை கடும் சிக்கலில் இருக்கிறது. பல கோடி ரூபாய் முடங்கியுள்ளது.

    வீட்டில தனியா இருக்காராம்.. படுத்துக் கொண்டே செம செல்ஃபி.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஸ்!வீட்டில தனியா இருக்காராம்.. படுத்துக் கொண்டே செம செல்ஃபி.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோஸ்!

     அவசர கூட்டம்

    அவசர கூட்டம்

    இந்நிலையில், லாக்டவுனுக்குப் பிறகு படப்பிடிப்புகளைத் தொடங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவி வீட்டில் இன்று காலை அவசர கூட்டம் நடந்தது. தெலங்கானா சினிமாட்டோகிராபி அமைச்சர், தலசனி ஶ்ரீனிவாஸ் யாதவ் தலையில் நடந்த இந்தக் கூட்டத்தில், நடிகர் நாகார்ஜூனா, ராஜமவுலி, அல்லு அரவிந்த், தில் ராஜூ, கொரட்டல சிவா, சுரேஷ்பாபு உட்பட பல தெலுங்கு சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

    வெளிநாடு

    வெளிநாடு

    அனைவரும் மாஸ்க் அணிந்தபடி கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு முன்பாக நடிகர், சிரஞ்சீவி கூறியதாவது: வெளிநாடுகளில் ஷூட்டிங் நடப்பதற்காக பல தெலுங்கு படங்கள் காத்திருக்கின்றன. ஹீரோ, ஹீரோயின் முகத்தை நேராக பார்த்தாலே, அடுத்த காட்சி, ஈபிள் டவரில்தான் தொடங்கும். அப்படிதான் எடுத்திருக்கிறோம். கொரோனா காரணமாக இப்போதிருக்கும் சூழ்நிலையில், வெளிநாடு செல்ல வாய்ப்பில்லை.

     வெளிநாட்டுக் காட்சி

    வெளிநாட்டுக் காட்சி

    அதற்கு அனுமதி கிடைக்குமா என்பதும் தெரியவில்லை. பக்கத்து மாநிலங்களில் கூட படப்பிடிப்பு நடத்த அனுமதிப்பார்களா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் வெளிநாட்டுக் காட்சிகளை இங்கேயே செட் போட்டு படமாக்க வேண்டும். ஊட்டி, மூணாறு பகுதிகளில் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைத்தால் நடத்தலாம்.

     அவ்வளவு சிக்கல்

    அவ்வளவு சிக்கல்

    இது ஒருபுறம் இருந்தாலும் ஹீரோயின்களின் கால்ஷீட் கிடைப்பதில் பெரும் பிரச்னை இருக்கிறது. அதை எப்படி அவர்கள் பிரித்துக் கொடுக்க இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. தியேட்டர்கள் திறக்கப்பட்டு, ரசிகர்கள் வருவார்களா? என்பது ஒரு பக்கம் இருந்தாலும், படப்பிடிப்பை முடிப்பதற்குள் அவ்வளவு சிக்கல் இருக்கிறது. அதைப் பற்றி இங்கு பேச இருக்கிறோம்' என்றார்.

    Recommended Video

    Chiranjeevi & Grand Grand Daughter | Kalyan Dhev
     போஸ்ட் புரொடக்‌ஷன்

    போஸ்ட் புரொடக்‌ஷன்

    தயாரிப்பாளர் கவுன்சில் தலவர் கல்யாண் கூறும்போது, 'நாளை முதல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை தொடங்க அரசு அனுமதி கொடுத்திருக்கிறது' என்றார். அமைச்சர் தலசனி ஶ்ரீனிவாஸ் யாதவ் கூறும்போது, ' சினிமாதுறை கோரிக்கை குறித்து பரிசீலித்து விரைவில் ஷூட்டிங் தொடங்க அனுமதிப்பது பற்றி அறிவிப்போம் என்றார்.

    English summary
    Emergency meeting held in Telugu hero Chiranjeevi's house today. Telugu film fraternities participated this meeting and they discussed about the film shooting process after the lockdown
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X