»   »  கேளிக்கை வரி குறைக்கும் திட்டம் - விரைவில் அறிவிப்பு வெளியாகும்

கேளிக்கை வரி குறைக்கும் திட்டம் - விரைவில் அறிவிப்பு வெளியாகும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : திரைப்படங்களுக்கும் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில், திரைத்துறையினருக்கு 30% கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்தது. அதற்கு எதிர்ப்பு கிளம்பவே, 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டது.

ஆனாலும், ஜி.எஸ்.டி, கேளிக்கை வரி என 40 சதவீதத்துக்கு மேல் அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருப்பதால், தமிழக அரசு விதித்த கேளிக்கை வரியை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்த் திரைத்துறையினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Entertainment tax reduction plan - will soon be announced

இந்தப் பிரச்னையால் சமீபத்தில் சினிமா தியேட்டர்களும் மூடப்பட்டன. புதிய படங்கள் எதுவும் கடந்தவாரம் முதல் ரிலீஸ் ஆகவில்லை. அரசுக்கும், சினிமா துறையினருக்கும் இடையே இது தொடர்பாக கடந்த மூன்று நாட்களாக பேச்சு வார்த்தை நடந்து கொண்டு வருகிறது.

சினிமா நிர்வாகிகளுக்கும், அமைச்சர் வேலுமணிக்கும் இடையே நடந்த இந்த பேச்சுவார்த்தையில் கேளிக்கை வரி ரத்து செய்யும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. கேளிக்கை வரியை 10%ல் இருந்து 8 சதவீதமாக குறைக்க முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகும் எனத் தெரிகிறது.

English summary
The filmmakers have demanded that the Tamilnadu government to cancel entertainment tax. It seems to have decided to reduce the entertainment tax from 10% to 8% now.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil