»   »  அஜீத் ரசிகர் இல்லாதவர்கள் கூட அவரின் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள்: சிவா

அஜீத் ரசிகர் இல்லாதவர்கள் கூட அவரின் ரசிகர்கள் ஆகிவிடுவார்கள்: சிவா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத்துடன் பேசினால் அவரது ரசிகர் இல்லாதவர்கள் கூட அவரின் ரசிகராகிவிடுவார்கள் என இயக்குனர் சிறுத்தை சிவா தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள வேதாளம் படம் நாளை ரிலீஸாக உள்ளது. அனிருத் தெறிக்கும் இசையமைத்துள்ளார் என்று சிவா பெருமையாக தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் அவர் படம் பற்றியும், அஜீத் பற்றியும் கூறுகையில்,


தர லோக்கல்

தர லோக்கல்

வேதாளம் படத்தில் அஜீத்தின் கதாபாத்திரம் தர லோக்கலாக இருக்கும். அவர் வடசென்னையைச் சேர்ந்தவராக நடித்துள்ளார். அவரது பாஷையும் அப்படியே இருக்கும்.


அஜீத்

அஜீத்

ஒரு ரசிகனுக்கு தான் தனக்கு பிடித்த நடிகரை திரையில் எப்படி காட்ட வேண்டும் என்பது நன்கு தெரியும். நான் அஜீத் ரசிகன் ஆகிவிட்டேன். அஜீத்துடன் பேசினால் அவரது ரசிகர் இல்லாதவர் கூட ரசிகர் ஆகிவிடுவார். நான் சூப்பர்ஸ்டார்களின் ரசிகன். எம்.ஜி.ஆர்., ரஜினியை பார்த்து வளர்ந்தேன்.


கமர்ஷியல் படங்கள்

கமர்ஷியல் படங்கள்

ரசிகர்களை தங்களின் கவலையை மறந்து படம் பார்க்க வைக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அவர்கள் படத்தை பார்த்துவிட்டு மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் செல்ல வேண்டும். முடிந்தால் என் வாழ்க்கை முழுவதும் கமர்ஷியல் படம் எடுப்பேன்.


அனிருத்

அனிருத்

அனிருத் ஒரு பக்கா தல வெறியன். நான் அவரிடம் கதையை கூறியபோது ஒரு தீவிர அஜீத் ரசிகன் கதையை கேட்பது போன்று கேட்டார். அவர் சிறப்பாக இசையமைத்துள்ளார் என்றார் சிவா.


English summary
Director Siva told that those who are not Ajith fans will become his fan after interacting with him.
Please Wait while comments are loading...