Don't Miss!
- News
சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் தண்ணீர் தொட்டியில் ஊழியர் மரணம்.. 7 நாட்களாக கிடந்த சடலம்
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Lifestyle
உங்கள் துணையை தினமும் ஸ்பெஷலானவராக உணர வைக்க இந்த சின்ன சின்ன விஷயங்கள் போதுமாம்...!
- Sports
ஸ்ரேயாஸ்க்கு பதில் யார்? சூர்யகுமாரா? சுப்மன் கில்லா? தினேஷ் கார்த்திக்கின் பளிச் பதில்
- Automobiles
மாருதியின் புதுமுக காரை டெலிவரி பெற்ற ஜப்பான் தூதரக தலைவர்! எந்த காருனு தெரிஞ்சா நீங்களும் வாங்க விரும்புவீங்க
- Finance
மார்ச் மாதம் கெடு.. அதானி குழுமத்திற்கு வந்த புதிய பிரச்சனை..!
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
எந்தவொரு தில்லாலங்கடியும் இல்லை.. பிக் பாஸ் தமிழ் 5 டைட்டிலை வென்றது இவர் தான்.. கசிந்தது தகவல்!
சென்னை: பிக் பாஸ் தமிழ் 5 டைட்டிலை ராஜு ஜெயமோகன் தான் வென்றுள்ளார் என்கிற அட்டகாசமான தகவல் கசிந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் கிராண்ட் ஃபினாலே ஷூட்டிங் சற்று முன் நிறைவடைந்துள்ளது.
கடைசி நேரத்தில் பிக் பாஸ் டீம் ஏதோ கோல்மால் பண்ணி வருவதாக கணிப்புகள் எழுந்த நிலையில், தற்போது மக்களின் தீர்ப்பே இறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் தமிழ் 5 கிராண்ட் ஃபினாலே.. சிறப்பு விருந்தினர் யாரு தெரியுமா? பரபரக்கும் தகவல்!

பஞ்சபூத கான்செப்ட்
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 கடந்த அக்டோபர் 3ம்தேதி தொடங்கியது. 20 போட்டியாளர்களுடன் களைகட்டிய இந்த சீசன் ஜனவரி 16ம் தேதியுடன் பிரம்மாண்ட கிராண்ட் ஃபினாலேவுடன் நிறைவடைகிறது. 5வது சீசன் என்பதால் பஞ்சபூதங்களை கான்செப்ட்டாக கொண்டு இந்த சீசன் நடைபெற்றது. நிலம், நீர், ஆகாயம், நெருப்பு மற்றும் காற்று சக்திகளை கொண்டு போட்டியாளர்கள் இந்த சீசனை கொண்டு சென்றனர்.

லாக்டவுன் காரணமாக
கடந்த சீசனில் வின்னர் யார் என்பது லீக் ஆகி விடக் கூடாது என்பதற்காக சனிக்கிழமை மாலை தொடங்கி ஞாயிற்றுக் கிழமை மாலை வரை ஷூட்டிங் நடைபெற்றது. ஆனால், இந்த முறை ஞாயிற்றுக்கிழமை முழு லாக்டவுன் என்பதால் இன்றே கிராண்ட் ஃபினாலேவின் ஷூட்டிங் நிறைவடைந்து விட்டது.

4வது இடத்தில் அமீர்
நிரூப் நந்தகுமார் 5வது இடத்தில் வெளியேறி உள்ள நிலையில், நடன இயக்குநரான அமீர் 4வது இடத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என தகவல்கள் கசிந்துள்ளன. டிக்கெட் டு ஃபினாலே வெற்றிப் பெற்ற அமீர் 4வது இடத்தில் வெளியேறி இருப்பதே சிறப்பான விஷயம் தான் என அமீர் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

செகண்ட் ரன்னர் அப்
பல தடைகளையும் சங்கடங்களையும் இந்த சீசனில் திடமான மனதுடன் கடந்து தொடர்ந்து இளைஞர்களின் ஃபேவரைட்டான போட்டியாளராக இருந்த பாவனி இந்த சீசனின் செகண்ட் ரன்னர் ஆப் ஆக மாறி உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பாவனி டைட்டிலை வின் பண்ண வேண்டும் என தொடர்ந்து சப்போர்ட் பண்ணி வந்த பாவனி ஆர்மியினருக்கு இது சற்றே மன வருத்தத்தை தரத்தான் செய்யும்.

பிக் பாஸ் குயின் பிரியங்கா
பிக் பாஸ் தமிழ் சீசன் 5ஐ ஒட்டுமொத்தமாக தனது தோளில் சுமந்து 105 நாட்களாக நடத்திக் கொண்டிருக்கும் ஒரே போட்டியாளர் என்றால் அது நம்ம பிக் பாஸ் குயின் பிரியங்கா தான். பிக் பாஸ் சீசன் 2ல் ரித்விகா டைட்டிலை வென்றது போல இந்த சீசனில் பிரியங்கா வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடந்த சீசனில் ஷோவை கலகலப்பாக கொண்டு சென்ற பாலாவை போல பிரியங்கா தற்போது ரன்னர் அப் ஆகி உள்ளார் என தகவல்கள் கசிந்துள்ளன.

மக்களின் வின்னர் ராஜு
நாமினேட் ஆன போது எல்லாம் மக்கள் ஓட்டுக்களால் தொடர்ந்து முதலிடத்தில் சேவ் ஆன ராஜு ஜெயமோகன் தான் இந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் டைட்டில் வின்னராக ஆகி உள்ளார் என்கிற அட்டகாசமான தகவலும் தற்போது கசிந்துள்ளது. ராஜுவுக்காக தொடர்ந்து ஓட்டுக்களை போட்டு வந்த ராஜு ஆர்மியினர் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர்.

நோ தில்லாலங்கடி
கடந்த வாரம் திடீரென நிரூப்பை செகண்ட் ஃபைனலிஸ்ட்டாக மாற்றியதில் இருந்தே பிக் பாஸ் டீம் தனது வேலையை கிராண்ட் ஃபினாலேவில் காட்ட ஆரம்பித்து விட்டது என்றும் உடல் நலக் குறைவாக பிரியங்கா வெளியேற்றப்பட்டதும் ஒரு டிராமாவாக இருக்கலாம் என ஏகப்பட்ட யூகங்கள் ரசிகர்கள் மத்தியில் கிளம்பின. இந்நிலையில், எந்தவொரு தில்லாலங்கடியும் கிராண்ட் ஃபினாலேவில் நடக்கவில்லை என்றும் இந்த முறையும் மக்களின் ஓட்டுக்களின் அடிப்படையிலேயே பிக் பாஸ் வின்னர் தேர்வாகி உள்ளார் என தெரிகிறது. அடுத்த சீசனில் மக்கள் தான் கொஞ்சம் கேமை மாற்றி விளையாட வேண்டும் போல!