பாக். நடிகர் சர்ச்சை... ஐஸ்வர்யா ராய் படம் வெளியாவதில் 4 மாநிலங்களில் சிக்கல்!
ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏ தில் ஹை முஷ்கில்' படத்தில் பாகிஸ்தான் நடிகர் ஃபவத்கான் இடம்பெற்றுள்ளதால் அந்தப் படத்தை திரையிடப் போவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கரண் ஜோஹர் இயக்கத்தில் ரன்பீர் கபூர் - ஐஸ்வர்யா ராய் நடித்த இந்தத் திரைப்படத்தை தீபாவளிக்குக் கொண்டுவரத் திட்டமிடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாகிஸ்தான் நடிகர் ஃபவத்கான் இப்படத்தில் நடித்துள்ளதால் அந்தப் படத்தை திரையிடக் கூடாது என்று மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதையடுத்து ஏ தில் ஹே முஸ்கில் படத்தை திரையிடப்போவதில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், கோவா மற்றும் வட கர்நாடகத்தில் படத்தைத் திரையிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











