வாரிசு படத்தில் இணைந்த பிக்பாஸ் பிரபலம்...விஜய்க்கே டஃப் கொடுப்பார் போல

சென்னை : விஜய் தற்போது டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தில் ராஜு, ஸ்ரீ வெங்கடேஷ்வரா பேனரில் இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்.

ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் வாரிசு படத்தின் ஷுட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் படத்தின் ஷுட்டிங் ஸ்பாட் ஸ்டில்கள், வீடியோக்கள் தொடர்ந்து இணையத்தில் கசிந்து வருவதால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

வாரிசு ஷுட்டிங் போட்டோக்களை பகிர வேண்டாம் என விஜய்யின் மகன் சஞ்சய் ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார். வாரிசு படத்தின் ஷுட்டிங் செப்டம்பர் மாதத்தில் நிறைவடையும் என சொல்லப்படுகிறது.

எஸ்.ஜே.சூர்யாவும் இருக்கார்

எஸ்.ஜே.சூர்யாவும் இருக்கார்

குடும்ப சென்டிமென்ட், ஆக்ஷன், ரொமான்டிக் படமாக உருவாகி வரும் வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம்,ஜெயசுதா, குஷ்பு, சங்கீதா கிருஷ், சம்யுக்தா, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். எஸ்.ஜே.சூர்யாவும் மிக முக்கிய ரோலில் கெஸ்ட் ரோல் செய்வதாக சொல்லப்பட்டது.

இந்த பிக்பாஸ் பிரபலமுமா

இந்த பிக்பாஸ் பிரபலமுமா

இந்த சமயத்தில் பிக்பாஸ் பிரபலமும், பிரபல நடிகருமான கணேஷ் வெங்கட்ராமனும் வாரிசு படத்தில் இணைந்துள்ளார். இந்த தகவலை அவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.வாரிசு படத்திற்காக மேக்அப் போடும் வீடியோ தான் அவர் பகிர்ந்துள்ளார்.

இந்த பிரபலத்தை நினைவிருக்கா?

இந்த பிரபலத்தை நினைவிருக்கா?

பிக்பாஸ் தமிழ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டவர் கணேஷ் வெங்கட் ராமன். இவர் அபியும் நானும், உன்னை போல் ஒருவன், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தியிலும் பிரபலமான இவர் பெரும்பாலும் போலீஸ் ரோலிலேயே நடித்துள்ளார்.

விஜய் உடன் நடிப்பது த்ரில்லிங்

விஜய் உடன் நடிப்பது த்ரில்லிங்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே வீடியோ மூலம் தான் வாரிசு படத்தில் நடிப்பதை தெரிவித்த கணேஷ், அந்த வீடியோவுடன், விஜய்யுடன் நடிப்பது த்ரில்லிங்காக, ஆர்வமாக உள்ளது. இது மேக் அப் டைம் என கேப்ஷன் பதிவிட்டுள்ளார். இதனால் இவர் என்ன ரோலில் நடிக்க போகிறார் என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.விஜய்க்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு ஆள் செம ஹைட், வெயிட்டாக உள்ளாரே. இந்த படத்திலும் போலீஸ் தானா என கேட்டு வருகின்றனர்.

முன்கூட்டியே ரிலீசாக போகிறதா?

முன்கூட்டியே ரிலீசாக போகிறதா?

வாரிசு படம் 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகும் என சொல்லப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு தீபாவளிக்கே படத்தை ரிலீஸ் செய்து விடலாமா என படக்குழு ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X