»   »  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஸ்டாரான கமல், விஜய், சிம்பு, ஸ்ரீதேவி

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஸ்டாரான கமல், விஜய், சிம்பு, ஸ்ரீதேவி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல் ஹாஸன், ஸ்ரீதேவி, விஜய், சிம்பு உள்ளிட்டோர் பெரிய திரை நட்சத்திரங்களாக ஆகியுள்ளனர்.

இன்று உலக நாயகனாக, இளைய தளபதியாக உள்ள கமல் ஹாஸனும், விஜய்யும் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானவர்கள். அவர்கள் தவிர்த்து சிம்புவும் குட்டிப்பையனாக அறிமுகமாகி கோலிவுட்டை கலக்கியவர் தான்.

மனதை கவரும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பெரிய ஸ்டார்களானவர்கள் இவர்கள்.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

கெட்டப்பை மாற்றி வித்தியாசமாக நடிக்கும் உலக நாயகன் கமல் ஹாஸன் களத்தூர் கண்ணம்மா படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். சுட்டிப் பையனாக அவர் எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார்.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி 4 வயது சிறுமியாக இருக்கையில் நடிக்க வந்தவர். அவர் தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பின்னர் வளர்ந்த பிறகு கோலிவுட், டோலிவுட், பாலிவுட்டின் முன்னணி நாயகி ஆனார்.

விஜய்

விஜய்

இளையதளபதி விஜய் 1984ம் ஆண்டு வெளியான வெற்றி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். சிறுவனாக கோலிவுட் வந்த விஜய் தற்போது தமிழ் ரசிகர்களின் மனம் கவர்ந்த ஹீரோவாகியுள்ளார்.

மீனா

மீனா

நடிகை மீனாவும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அவர் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்து பலரையும் கவர்ந்தார். அவர் வளர்ந்த பிறகு தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பல காலம் ஹீரோயினாக நடித்தார்.

ஷாலினி

ஷாலினி

பேபி ஷாலினியை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவுக்கு குழந்தை நட்சத்திரமாக இருக்கையில் ஜொலித்தவர் ஷாலினி. வளர்ந்த பிறகு ஹீரோயினாகவும் அவர் சிறப்பாக நடித்தார். அஜீத்தை திருமணம் செய்த பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டார்.

சிம்பு

சிம்பு

சிம்பு 2 வயது குழந்தையாக இருக்கும்போதே நடிக்க வந்துவிட்டார். அவர் தனது தந்தை டி.ராஜேந்தரின் படங்களில் சுட்டிப் பையனாக நடித்து மக்களின் மனதை கவர்ந்தார். தற்போது அவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.

ஹன்சிகா

ஹன்சிகா

ஹன்சிகா இந்தி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். வளர்ந்த பிறகு அவர் தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். கோலிவுட்டின் பிசியான நாயகியாக உள்ளார் ஹன்சிகா.

English summary
Above is the list of successful stars who came to the film industry as child artists.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil