தளபதி 67 ல் இணையும் பிரபல டைரக்டர்...இதுல என்ன ரோல் இவருக்கு?

சென்னை : வரிசையாக வெற்றி படங்களை கொடுத்து வரும் டைரக்டர் லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்திற்கு பிறகு எதிர்பார்க்கப்படும் டைரக்டர் ஆகி உள்ளார். இவரது அடுத்த படம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

கைதி 2, விக்ரம் 3, தளபதி 67 என 3 படங்கள் கையில் வைத்துள்ளார். இதனால் முதலில் எந்த படத்தை இயக்க போகிறார் என அனைவரும் ஆர்வமாக பார்த்து வருகின்றனர். இவை 3 படங்களுமே எதிர்பார்க்கப்படும் படங்கள் தான்.

இதற்கிடையில் விக்ரம் படத்தில் வரும் ஃபகத் ஃபாசிலின் அமர் கேரக்டரை தனி கதையாக உருவாக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக மற்றொரு தகவலும் வெளியானது. இதனால் லோகேஷின் பட லிஸ்ட் நீண்டு கொண்டே செல்கிறது.

தளபதி 67 கதை இதுவா?

தளபதி 67 கதை இதுவா?

ஆனால் அதிகமான தகவல்கள் சொல்லும் தகவல், லோகேஷ் அடுத்தபடியாக விஜய்யின் தளபதி 67 படத்தை இயக்கவே அதிக வாய்ப்புள்ளது என்பது தான். இதற்காக புதிய கதையை லோகேஷ் உருவாக்கி வருகிறாராம். இது கேங்ஸ்டர் கதை என சொல்லப்படுகிறது. அதுவும் அட்லி இயக்கிய பிகில் படத்தில் வரும் ராயப்பன் கேரக்டரை தான் தனி கதையாக லோகேஷ் இயக்க போகிறாராம்.

தளபதி 67ல் பிரபல டைரக்டர்

தளபதி 67ல் பிரபல டைரக்டர்

விஜய்யின் மாஸ்டர், கமலின் விக்ரம் படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றிய டைரக்டர் ரத்னகுமார், தளபதி 67 படத்திலும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கும் இவர் தான் திரைக்கதை அமைக்க போகிறாராம். இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை லோகேஷ் மற்றும் ரத்னகுமார் ஏற்கனவே துவங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்னும் அறிவிப்பே வரலியே

இன்னும் அறிவிப்பே வரலியே

விஜய் தற்போது வம்சி பைடபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் ஏறக்குறைய பாதிக்கும் மேல் முடிந்து விட்டதால், தளபதி 67 படம் பற்றிய பேச்சுக்கள் அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. தளபதி 67 படம் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

 தளபதி 67 டைரக்டர் லோகேஷா? இல்லையா?

தளபதி 67 டைரக்டர் லோகேஷா? இல்லையா?

இதனால் தளபதி 67 டைரக்டர் லோகேஷா இல்லையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது, ஆனால் மாஸ்டர் பட ஷுட்டிங்கின் போதே, ஒரு வரியில் கதை சொல்லி விஜய்யிடம் ஓகே வாங்கி விட்டாராம் லோகேஷ். அதை தான் இப்போது விரிவாக உருவாக்கி வருகிறாராம். இதனால் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.

 எதிர்பார்ப்பை கிளப்பும் காம்போ

எதிர்பார்ப்பை கிளப்பும் காம்போ

ரத்னகுமார் - லோகேஷ் காம்போ ஏற்கனவே ஹாட்ரிக் ஹிட் கொடுத்துள்ளது. இதில் தளபதி 67 யிலும் இவர்கள் இணைய போகிறார்கள் என்ற தகவல் படத்தின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது. இவர்களின் காம்போ மீண்டும் இணைந்துள்ள தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X