»   »  முதல் படம் லேட்டு தான்… ஆனாலும் சாதித்த நட்சத்திரங்கள்!

முதல் படம் லேட்டு தான்… ஆனாலும் சாதித்த நட்சத்திரங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. அது தொட்டதுக்கெல்லாம் செண்டிமெண்ட் பார்ப்பது. ஒருவர் நடித்த முதல் படம் ரிலீஸாகும் வரை காத்திருப்பார்கள். அதன் ரிசல்ட் தான் அந்த நடிகர், நடிகையின் கேரியரை தீர்மானிக்கும். ஆனால் நாம் பார்க்கப்போகும் ஆட்கள் எல்லோருடைய முதல் படமுமே அவர்கள் கேரியருக்கு முதல் படமல்ல. இவர்கள் எல்லோரும் செண்டிமெண்டை வென்றவர்கள்.

சிம்ரன்

சிம்ரன்

சிம்ரனின் முதல் படம் எதுவென்று கேட்டால் ஒன்ஸ்மோர் என்பார்கள். விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். சிவாஜியும் முக்கிய ரோலில் நடித்தார். உண்மையில் சிம்ரனுக்கு முதல் படம் நேருக்கு நேர். இதில் அறிமுகமான சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமானார் சிம்ரன். ஆனால் சில காரணங்களால் நேருக்கு நேர் தாமதமாகவே ஒன்ஸ்மோர் ரிலீஸானது. இரண்டு படங்களுமே சில மாத இடைவெளியில் 1997ல் தான் ரிலீஸானது.

த்ரிஷா

த்ரிஷா

13 ஆண்டுகளுக்கும் மேலாக கொடிகட்டி பறந்தாலும் த்ரிஷாவின் ஆரம்ப கேரியர் மிகவும் சிரமமானது. ஹீரோயினுக்கு தோழியாக சில படங்களில் தலைகாட்டியவர் ஹீரோயினாக கமிட் ஆனது லேசா லேசா படத்திற்காக. ஆனால் அந்த படம் தாமதமாக அதற்குள்ளாகவே த்ரிஷா நடித்த மவுனம் பேசியதே வெளியாகி விட்டது. பின்னர் ஒரு வருடம் கழித்துதான் லேசா லேசா வெளியானது.

அசின்

அசின்

அசினுக்கு உள்ளம் கேட்குமே படம் தான் முதல் படம். ஆனால் சுமார் மூன்று ஆண்டுகள் தாமதமாய் வெளியான உள்ளம் கேட்குமே படத்தை முந்திக்கொண்டது எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி.

ஆர்யா

ஆர்யா

ஆர்யாவுக்கும் முதல் படம் உள்ளம் கேட்குமே தான். ஆனால் அது லேட் ஆகவே நடித்த படம் தான் அறிந்தும் அறியாமலும். அந்த படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து 175 நாட்களை தாண்டி ஓடியது.

ப்ரியா ஆன்ந்த்

ப்ரியா ஆன்ந்த்

ப்ரியா ஆனந்த் அமெரிக்காவில் இருந்து ரிட்டர்ன் ஆன கையோடு நடிக்க ஒப்புக்கொண்ட படம் புகைப்படம். ஆனால் அந்த படம் ஃபைனான்ஸ் பிரச்னைகளால் இழுத்துக்கொண்டே போக 2009ல் வாமனன் படத்தில் அறிமுகமானார் ப்ரியா. அதன் பின்னர் ஒரு ஆண்டு கழித்து தான் புகைப்படம் வெளியாகி ஃப்ளாப் ஆனது.

சமந்தா

சமந்தா

சமந்தாவின் முதல் படமாக கணக்கில் வரும் படம் விண்ணைத் தாண்டி வருவாயா. ஆனால் சமந்தாவின் உண்மையான முதல் படம் மாஸ்கோவின் காவேரி. படம் முடிந்தும் கூட இயக்குனர் தயாரிப்பாளர் மோதலால் படம் ரிலீஸாகாமல் தூங்கியது. அந்த படம் ரிலீஸாவதற்குள் தெரிந்த முகமாகிவிட்டார் சமந்தா.

லட்சுமிமேன்ன்

லட்சுமிமேன்ன்

கும்கி படத்துக்காக விக்ரம் பிரபுவுக்கு ஜோடி தேடியபோதுதான் கண்ணில் பட்டார் லட்சுமிமேனன். ஆனால் கும்கி படப்பிடிப்பு தாமதமாகவே அதற்குள் சுந்தரபாண்டியன் பட்த்தில் நடித்து அந்த படமும் ரிலீஸாகிவிட்டது. இரண்டுமே ஹிட் அடித்ததில் லட்சுமியின் கேரியர் உயர்ந்தது.

ஜிவி.பிரகாஷ்

ஜிவி.பிரகாஷ்

2013லிலேயே ஹீரோவாவதற்கு பூஜை போட்டார் ஜிவி.பிரகாஷ். பென்சில் தான் அவர் அறிமுகமான படம் அந்த படம் இழுத்துக்கொண்டே போக கமிட் ஆன படம் தான் டார்லிங். அந்த படம் முதலில் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. ஆனால் பென்சில் படு ஃப்ளாப் ஆனது.

English summary
Here is the list of successful film stars 'starting troubles'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil