Just In
Don't Miss!
- News
மாசி மகம் : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை தரிசித்த துர்கா ஸ்டாலின் - வெற்றிக்கு வழிபாடு
- Automobiles
ரெனால்ட் கைகர் காரின் டெலிவரி மார்ச் 3ல் தொடக்கம்... விலையை கேட்டால் நீங்களும் புக் பண்ணீருவீங்க...
- Education
ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய NCRTC துறையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!!
- Finance
3வது நாளாகப் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை..!
- Sports
சுயமாக யோசிங்க..யுவ்ராஜ் சிங்கின் விமர்சனம்..பதிலடி கொடுத்த அஸ்வின், புரியாமல் குழம்பும் ரசிகர்கள்
- Lifestyle
இந்த ராசிக்கார பெண்கள் அற்புதமான சகோதரிகளாக இருப்பாங்களாம்... இவங்க சகோதரியா கிடைக்க அதிர்ஷ்டம் வேணுமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
குட்டி பவானிக்கு பிறந்தநாள்.. டிரெண்டாகும் #HBDMasterMahendran.. பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து!
சென்னை: சின்ன வயதில் இருந்தே தமிழ் சினிமா ரசிகர்களை தனது நடிப்பால் சிரிக்க வைத்தும் வியக்க வைத்தும் வந்த மாஸ்டர் மகேந்திரனின் 30வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.
மகேந்திரனை இன்னமும் பலரும் குழந்தை நட்சத்திரமாகவே பார்த்து வரும் நிலையில், மாஸ்டரில் குட்டி பவானியாக நடித்து, எனக்கும் 30 வயசாகிடுச்சு என மாஸ் காட்டி உள்ளார்.
பத்தினின்னா செத்து நிரூபி.. சித்ராவை பாடாய் படுத்திய ஹேமந்த்.. வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்!
மகேந்திரனின் பிறந்தநாளை ரசிகர்கள் #HBDMasterMahendran என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மாஸ்டருக்கு முன்பே
மாஸ்டர் படத்துக்கு முன்பே மாஸ்டர் பட்டத்தை சிறு வயதில் இருந்தே பெற்றுள்ள மகேந்திரனின் பிறந்தநாளை ரசிகர்கள் #HBDMasterMahendran என்ற ஹாஷ்டேக்கை போட்டு டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர். 1991ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர் மகேந்திரன். நாட்டாமை படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

செல்லப் பிள்ளை
முதல் படமான நாட்டாமை படத்தில் நான் பார்த்தேன் என சாட்சியாக நடித்து அசத்திய மாஸ்டர் மகேந்திரன், தாய்க்குலமே தாய்க்குலமே, மகா பிரபு, கோயம்பத்தூர் மாப்பிள்ளை, காதலா காதலா, நட்புக்காக, படையப்பா, மின்சார கண்ணா என ஏகப்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் மக்களின் செல்லப்பிள்ளையாகவே மாறினார்.

குட்டி பவானி
இந்த பொங்கலுக்கு நடிகர் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்சேதுபதியின் சிறு வயது கதாபாத்திரத்தில் குட்டி பவானியாக மாஸ்டர் மகேந்திரன் வரும் ஆரம்ப காட்சிகள் எல்லாம் தியேட்டரில் வேற லெவல் விசில் சத்தம் காதை கிழித்து வருகிறது.

விஜய் ரசிகர்கள் வாழ்த்து
மாஸ்டர் படத்தில் நடித்துள்ள மாஸ்டர் மகேந்திரனின் பிறந்தநாளை தளபதி ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், ஏகப்பட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய்சேதுபதி ரசிகர்கள் மகேந்திரனை வாழ்த்தி வருகின்றனர்.

ஹேப்பி பர்த்டே மச்சான்
மாஸ்டர் மகேந்திரனை போலவே சிறு வயதில் இருந்து நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் சாந்தனு, தனது ட்விட்டர் பக்கத்தில் ஹேப்பி பர்த்டே மச்சான் என மாஸ்டர் மகேந்திரனின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களும், பிரபலங்களும் மாஸ்டர் மகேந்திரனை வாழ்த்தி வருகின்றனர்.

ரொம்பவே கஷ்டப்பட்டேன்
மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கு பிறகு சமீபத்தில் பேட்டியளித்திருந்த மாஸ்டர் மகேந்திரன், சிறு வயதில் கிடைத்த பெயருக்கு பிறகு, நடிகராக நடிக்க மிகவும் போராடினேன். ஆனால், சரியான வாய்ப்பு கிடைக்காமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இப்படியொரு வாய்ப்பை எனக்கு கொடுத்ததற்கு நன்றி கடன் பட்டுள்ளேன் என்று உருக்கமாக பேசியிருந்தார். குட்டி பவானி போல இன்னும் பல வெயிட்டான கதாபாத்திரத்தில் நடிக்க வாழ்த்துக்கள்!