சஞ்சீவை சிக்க வைத்த நிரூப் ...ப்ரோமோவில் கொளுத்தி போட்ட பிக்பாஸ்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி 10 வது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. மிக விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 8 பேர் எவிக்ஷன் மூலம் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ரசிகர்களின் கடும் எதிர்ப்புக்களுடன் இரண்டாவது முறையாக பிக்பாஸ் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார் அபிஷேக். இந்நிலையில் இந்த வார நிகழ்ச்சி எப்படி இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்க துவங்கி விட்டனர்.

அமீரை வாரி விட்ட பாவ்னி

அமீரை வாரி விட்ட பாவ்னி

இந்நிலையில் நிகழ்ச்சியின் 64 வது நாளான இன்றைய எபிசோடிற்கான ப்ரோமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதன் முதல் ப்ரோமோவில் இந்த வார கேப்டனை தேர்வு செய்வதற்கான போட்டி நடக்கிறது. இந்த மியூசிக் சேர் போட்டியில் கடைசி வரை போராடி, அக்ஷராவை வீழ்த்தி வெற்றி பெறுகிறார் அமீர். இதைத் தொடர்ந்து காயின் பவரை பயன்படுத்தி கேப்டனை மாற்ற விரும்புறீங்களா என பாவ்னியிடம் கேட்கிறார் பிக்பாஸ்.

அதிர்ச்சியில் அமீர்

அதிர்ச்சியில் அமீர்

பத்தாவது வாரத்துடன் காயினுக்கான பவர் முடிந்து விடும் என்பதால், தன்னிடம் உள்ள காயின் பவரை பயன்படுத்துவதாக சொல்கிறார் பாவ்னி. தானே தலைவரும் ஆகிறார். தன்னிடம் நெருங்கி பழகி வரும் பாவ்னி இப்படி செய்ததை எதிர்பார்க்காத அமீர், அதிர்ச்சியாகி நிற்கிறார்.

பாவ்னி – அக்ஷரா மோதல்

பாவ்னி – அக்ஷரா மோதல்

இதைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில், காயின் பவரை பயன்படுத்தி கேப்டன் ஆன பாவ்னிக்கு தண்டனையாக மற்றவர்களுக்கு வேண்டியதை செய்து கொடுக்க சொல்கிறார் பிக்பாஸ். இதை வைத்து பாவ்னி, அக்ஷரா இடையே வாக்குவாதம் நடக்கிறது. ஏற்கனவே இருவருக்கும் ஆரம்பம் முதலே மோதல் வெடித்து வரும் நிலையில் பிக்பாஸ் வேறு கொளுத்தி போட்டுள்ளார் என்கின்றனர் ரசிகர்கள்.

சஞ்சீவை சிக்க வைத்த நிரூப்

சஞ்சீவை சிக்க வைத்த நிரூப்

மூன்றாவது ப்ரோமோவில், இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்டவர்கள் அபினய், சிபி, நிரூப், அக்ஷரா, இமான் அண்ணாச்சி. உங்களிடம் உள்ள காயினை பயன்படுத்தி நாமினேஷனில் இருந்து தப்பிக்க விரும்புகிறீர்களா என நிரூப்பிடம் கேட்கிறார் பிக்பாஸ். தனது காயின் பவரை பயன்படுத்துவதாகவும், தனக்கு பதில் சஞ்சீவை நாமினேட் செய்வதாகவும் சொல்கிறார் நிரூப்.

தப்பிக்க நடந்த போட்டி

தப்பிக்க நடந்த போட்டி

அப்படியானால் உங்களுக்கும் சஞ்சீவிற்கும் ஒரு போட்டி நடத்தப்படும். அதில் நீங்கள் வெற்றி பெறும் பட்சத்தில் உங்களை நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள முடியும் என்கிறார் பிக்பாஸ். இதைத் தொடர்ந்து நிரூப், சஞ்சீவ் இடையே போட்டி நடத்தப்படுவதாக மூன்றாவது ப்ரோமோ நிறைவடைகிறது.

கொளுத்தி போட்ட பிக்பாஸ்

கொளுத்தி போட்ட பிக்பாஸ்

முதல் ப்ரோமோவில் நெருங்கிய நண்பர்களாக இருந்த அமீர் - பாவ்னி இடையே உரசலை வரவழைத்தது, இரண்டாவது ப்ரோமோவில் பாவ்னி - அக்ஷரா இடையேயான மோதலை அதிகரிக்க செய்தது, மூன்றாவது ப்ரோமோவில் சஞ்சீவ் - நிரூப்பை மோத வைத்தது என செமையாக கொளுத்தி போட்டுள்ளார் பிக்பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X