twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மாஸ்ன்னா இப்படி இருக்கனும்...கொரோனாவிலும் தில்லாக களமிறங்கிய விஜய்யின் மாஸ்டர்

    |

    சென்னை : டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் 2021ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு. கொரோனா சமயத்தில் தில்லாக களமிறங்கி 100 கோடி வசூல் சாதனை படைத்த மாஸ்டர் படத்தில் ஓராண்டு சாதனையை ரசிகர்கள் மாஸாக கொண்டாடி வருகின்றனர்.

    சேவியர் பிரிட்டோ தயாரித்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கி இருந்தார். விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த இந்த படத்தில் மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், ஆண்டிரியா உள்ளிட்ட பலர் முக்கிய ரோல்களில் நடித்திருந்தனர். விஜய் - விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்த படம் என்பதால் ஆரம்பத்தில் இருந்தே இந்த படத்திற்கு வரவேற்பு அதிகம் காணப்பட்டது.

    இந்த ஆண்டு ஹாஷ்டேக் டாப் 10ல் இடம்பிடித்த ஒரே சினிமா ஹாஷ்டேக் மாஸ்டர் தான்.. மாஸ் காட்டிய விஜய்!இந்த ஆண்டு ஹாஷ்டேக் டாப் 10ல் இடம்பிடித்த ஒரே சினிமா ஹாஷ்டேக் மாஸ்டர் தான்.. மாஸ் காட்டிய விஜய்!

     கொரோனாவால் தாமதமான ரிலீஸ்

    கொரோனாவால் தாமதமான ரிலீஸ்

    2019 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கப்பட்ட மாஸ்டர் படத்தின் ஷுட்டிங், 2019ம் ஆண்டின் இறுதியில் நிறைவு செய்யப்பட்டது. தளபதி 64 என்ற பெயரிலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இந்த படத்தின் ஷுட்டிங்கை நிறைவு செய்த பிறகு தான் படத்தின் டைட்டிலையே அறிவித்தனர். 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் தேதி மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.

    தில்லாக களமிறங்கிய மாஸ்டர்

    தில்லாக களமிறங்கிய மாஸ்டர்

    கிட்டதட்ட ஓராண்டு கழித்து 2021ம் ஆண்டு பொங்கலுக்கு தான் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்தனர். அப்போதும் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதனால் அந்த சமயத்தில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. பல படங்கள் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் முடங்கி கிடந்தன.

    விமர்சனங்களை மீறி சாதனை

    விமர்சனங்களை மீறி சாதனை

    இருந்தாலும் துணிந்து மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்தனர். கொரோனா சமயத்தில் படத்தை ரிலீஸ் செய்ததற்காக பலரும் கடுமையாக விமர்சித்தனர். கடும் விமர்சனங்களையும் மீறி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது மாஸ்டர் படம். ரூ.135 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.230 கோடி முதல் 300 கோடி வரை வசூல் செய்தது.

    நம்பிக்கை கொடுத்த மாஸ்டர்

    நம்பிக்கை கொடுத்த மாஸ்டர்

    மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவு திரையுலகினருக்கும், தியேட்டர் உரிமையாளர்களுக்கும் புதிய நம்பிக்கையை கொடுத்தது. மாஸ்டர் படம் கொடுத்த நம்பிக்கையால் அடுத்தடுத்து பல படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. மீண்டும் மக்கள் தியேட்டர்களுக்கு வர துவங்கினர். தமிழில் மட்டுமின்றி கன்னடம் மற்றும் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு ஜனவரி 14ம் தேதி மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

    Recommended Video

    Thalapathy Vijay's 10 Years of NANBAN |Jiiva, Shankar #Vijayism #JAN12
    பாகுபலி 2 சாதனை முறியடிப்பு

    பாகுபலி 2 சாதனை முறியடிப்பு

    யாரும் தொட முடியாது என நினைத்த பாகுபலி 2 படத்தின் தமிழ்நாடு பங்கு சாதனையை மாஸ்டர் படம் முறியடித்தது. கொரோனா காலத்திலும், 50 சதவீதம் பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்ட நிலையிலும் 100 நாட்கள் ஓடியது இந்த படம். 2021ல் பிளாக்பஸ்டர் படங்கள் மற்றும் 100 கோடி வசூல் கிளப் படங்களுக்கு பிள்ளையார்சுழி போட்ட படம் மாஸ்டர் தான். இதனை ரசிகர்கள் தற்போதும் கொண்டாடி வருகின்றனர்.

    English summary
    Vijay's Master movie completes one year of theatre release today. This movie broke lot of records in corona pandamic situation. Master movie collected 250 to 300 crore and completed its 100th day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X