Don't Miss!
- Sports
மகளிர் ஐபிஎல் - 5 அணிகளுக்கான ஏலம் மூலம் ரூ. 4670 கோடி வருமானம்.. எந்த அணிகள் வாங்கியது.. விவரம்
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
- Lifestyle
பெண்கள் ஆண்களிடம் ரகசியமாக எதிர்பார்க்கும் 'அந்த' குணங்கள் என்னென்ன தெரியுமா? உங்ககிட்ட இதெல்லாம் இருக்கா?
- News
"மசாஜ் சென்டர்".. சிக்க போகும் முக்கிய பிரமுகர்கள்.. யாரந்த "கருப்பு ஆடுகள்".. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்
- Technology
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
ப்பா.. சரக்குடன் விஜய் தேவரகொண்டா.. படுத்துக் கொண்டு போஸ் கொடுத்த ராஷ்மிகா.. என்னங்க நடக்குது?
சென்னை: புத்தாண்டை முன்னிட்டு டோலிவுட்டின் இளம் ஹீரோ விஜய் தேவரகொண்டா சட்டை அணியாமல் கையில் சரக்குடன் நீச்சல் குளத்தில் குளிக்கும் போட்டோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் பதிவிட்ட அதே இடத்தில் தான் மாலத்தீவில் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் முன்னதாக போட்டோ போட்டார் என நெட்டிசன்கள் கண்டு பிடித்து கமெண்ட் போட்டு வருகின்றனர்.
ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவரகொண்டாவும் கீதா கோவிந்தம் படத்தில் நடித்ததில் இருந்தே ஒருவரை ஒருவர் காதலித்து வருவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
கடந்த ஆண்டு இருவரும் ஒன்றாக மாலத்தீவுக்கு சென்ற நிலையில், அப்போது எடுத்த போட்டோக்களைத்தான் இப்போ வெளியிட்டுள்ளனர் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு இருவரது காதலையும் கன்ஃபார்ம் பண்ண கார்னர் செய்து வருகின்றனர்.
தென்னிந்திய
படங்களில்
ஐட்டம்
சாங்ஸ்...
மட்டம்
தட்டிய
ராஷ்மிகா...
பாலிவுட்டுக்கு
மட்டும்
ஜால்ராவா?

சரக்குடன் புத்தாண்டு கொண்டாட்டம்
ஒரு ஆண்டில் முக்கியமான பல தருணங்கள் நம்மை சிரிக்க வைத்திருக்கும், சில அழ வைத்திருக்கும். சில வெற்றிகள் கிடைத்திருக்கும். சில தோல்விகளும் சூழ்ந்திருக்கும். அவற்றை எல்லாமே சரிசமமாக எடுத்துக் கொண்டு முன்னேறுவது தான் வாழ்க்கை என கையில் சரக்குடன் நீச்சல் குளத்தில் இருக்கும் போட்டோவை போட்டு புத்தாண்டு தத்துவத்தை பொழிந்து தள்ளியிருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

படுத்துக்கொண்டு போஸ்
ரெசார்ட் ஒன்றில் விஜய் தேவரகொண்டா போட்டோ போட்ட நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் ரெசார்ட் ஒன்றில் படுத்துக் கொண்டு சன் பாத் எடுக்கும் செம ஹாட்டான போட்டோவை போட்டு அதில் வானவில் எல்லாம் தெரியும் வண்ணம் இருக்க வெல்கம் 2023 என கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

இருவரும் ஒன்றாக
கடந்த அக்டோபரில் இதே இடத்தில் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா நீச்சல் குளத்தில் இருப்பது போல மாலத்தீவில் இருந்த போது போட்டோ போட்டார். ஆனால், அப்போது எடுத்த எந்தவொரு போட்டோவையும் விஜய் தேவரகொண்டா பதிவிடவில்லை. புத்தாண்டை முன்னிட்டு ராஷ்மிகா எடுத்த போட்டோவைத்தான் இப்போ விஜய் தேவரகொண்டா பதிவிட்டு புத்தாண்டு வாழ்த்து சொல்லி உள்ளார் என ரசிகர்கள் கண்டுபிடித்து கார்னர் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே சிக்கிய கண்ணாடி
அப்பவே ராஷ்மிகா அணிந்திருந்த கண்ணாடி விஜய் தேவரகொண்டா விமான நிலையத்தில் வரும் போது போட்டிருந்த அதே கண்ணாடி தான் என நெட்டிசன்கள் கண்டு பிடித்து கமெண்ட் போட்டிருந்தனர். ஆனால், இதுவரை இது தொடர்பாக எந்தவொரு விளக்கமோ மறுப்போ நடிகை ராஷ்மிகாவோ விஜய் தேவரகொண்டாவோ கொடுக்கவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகா பிசி
அடுத்ததாக ராஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். மேலும், அல்லு அர்ஜுன் உடன் புஷ்பா 2 படத்திலும் நடித்து வருகிறார். பாலிவுட்டில் அனிமல் படத்தில் நடித்து வரும் அறிவிப்பையும் புத்தாண்டை முன்னிட்டு வெளியிட்டு உள்ளார் ராஷ்மிகா.

சமந்தாவுடன் குஷி
இந்த ஆண்டு விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான லைகர் திரைப்படம் மண்ணை கவ்விய நிலையில், அடுத்ததாக சமந்தா உடன் அவர் இணைந்து நடித்துள்ள குஷி படம் வெளிவர உள்ளது. சமந்தாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், அந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததா? இல்லையா? என்பதும் கேள்விக்குறியாக உள்ளது.