»   »  'காதும்மாவுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா..!' - ஜொள்ளுவிட்ட நெட்டிஸன்கள்

'காதும்மாவுக்கு திருஷ்டி சுத்திப் போடுங்கப்பா..!' - ஜொள்ளுவிட்ட நெட்டிஸன்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகை நயன்தாரா தனது ட்விட்டர் பக்கத்தில் புதிதாக ஒரு புகைப்படத்தை அப்லோடு செய்திருந்தார். நந்தமுரி பாலகிருஷ்ணாவின் 102-வது படத்தை கே.எஸ்.ரவிகுமார் இயக்குகிறார்.

அந்தப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படத்தில் நயன்தாரா சேலை உடுத்தி, மிக அழகாகத் தெரிந்தார். அது போதாதா நம்ம காதும்மா ரசிகர்களுக்கு, ரிப்ளைகளில் வரிக்கு வரி வர்ணிக்கத் தொடங்கிவிட்டனர்.

சும்மாவை நயன் ரசிகர்கள் பித்துப் பிடித்தவர்கள் போலத்தான் உள்ளனர். இதனால்தான் அவர் தென்னிந்திய தேவதையாக தொடர்ந்து ஹிட்டாகவும், ஹீட்டாகவும் வலம் வந்து கொண்டுள்ளார்.

நயன்தாரா அழகில் உருகும் ரசிகர்கள்-வீடியோ

சும்மாவே

இந்த நிலையில் இந்தப் படம் அவர்களதை ரொம்பவே பரவசப்படுத்தி விட்டது போலும். கமெண்டுகள் ஒருபக்கம், கவிதைகள் மறுபக்கம் என மடை திறந்த வெள்ளமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கிறார்கள் ரசிக கண்மணிகள்.

கவித கவித..! :

'56 kg தாஜ்மஹால் எனக்கே எனக்கா...' ஒருவர் நயன்தாராவின் அழகை வர்ணித்து உருகியிருக்கிறார். 'ஏன்மா நீ மட்டும் இவ்ளோ அழகா இருக்க...' எனப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். 'கண் இமைகூட வதம் செய்கிறதடி...' என உருகோ உருகென உருகியிருக்கிறார் ஒரு ரசிகர்.

புருவமா... வானவில்லா... :

இன்னும் ஒருத்தர் டாப் கியர்ல போய், 'அது ஐ ப்ரோ இல்ல... ரெயின்போ' என சைக்கிள் கேப்பில் சிங்கிள் கவிதைத் தொகுப்பையே வெளியிட்டிருக்கிறார். இதெல்லாம் எங்க இருந்து பாஸ் புடிக்கிறீங்க..?

யோவ்.. சுகர் பேசண்டுயா நானு :

லேடி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் பலர் 'போட்டோவைப் பார்த்ததுமே செத்துட்டேன். லவ் யூ' என ஹார்ட்டின் ஸ்மைலியோடு கொலைவெறி லவ் டார்ச்சர்கள் செய்கிறார்கள். இன்னும் சிலர் 'அடுத்த அமெரிக்க ஜனாதிபதி நயன்தாரா' ரேஞ்சுக்கு தலைவி தலைவி என சில்லறையைச் சிதற விடுகிறார்கள்.

உங்க அழகும் ஸ்டைலும்... :

'வயசானாலும் அழகும், ஸ்டைலும் குறையவே இல்ல...' எனும் கமென்ட்களுக்கு மத்தியில் 'நீங்க மட்டும் ஒவ்வொரு பொறந்தநாளுக்கும் வயசு குறைஞ்சுக்கிட்டே போறீங்க...' எனும் தபூ சங்கர் டைப் கவிதைகளுக்கும் குறைவில்லை. இதோ ஒருவர் செய்திருக்கும் ரிப்ளையைப் பாருங்கள்...

பத்தாண்டுகளுக்கும் மேலாகத் திரையுலகில் இருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு சிறிதும் குறையவில்லை லேடி சூப்பர் ஸ்டாருக்கு..! கெத்து பேபி!

English summary
Fans atrocity replies for nayanthara's new picture. They described by Nayanthara poetry.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil