twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மணிரத்னம் ஏன் இப்படி செய்தார்...டீசர் விழாவில் ஏன் இத்தனை சொதப்பல்...ஆதங்கத்தை கொட்டும் ரசிகர்கள்

    |

    சென்னை : இந்த ஆண்டில் கோலிவுட்டில் ரிலீசான படங்களில் வலிமை, விக்ரம், எதற்கும் துணிந்தவன் போன்ற ஒரு சில படங்கள் தவிர மற்ற படங்கள் பெரிதாக பேசப்படவில்லை. மாறாக நெகடிவ் விமர்சனங்களையே பெற்றன.

    எதிர்பார்த்த படங்கள் சொதப்பினாலும் எதிர்பார்க்காத, அதுவும் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட கடைசி விவசாயி, சேத்துமான் போன்ற படங்கள் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன. தமிழில் சரியான படங்கள் வருவதில்லை என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதெல்லாம் ரசிகர்கள் சமாதானமாக சொன்னது, பொன்னியின் செல்வன் படத்தை தான்.

    பொன்னியின் செல்வன் படம் பாகுபலி, கேஜிஎஃப் 2 படங்களின் சாதனையை ஒரே நாளில் ஓரங்கட்டி, மிகப் பெரிய வசூல் சாதனை படைக்கும் என நம்பிக்கையுடன் தெரிவித்து வந்தனர்.

    லெஜண்ட் அண்ணாச்சி உடன் மோதப் போகும் சந்தானம்.. குலுகுலு ரிலீஸ் எப்போ தெரியுமா? லெஜண்ட் அண்ணாச்சி உடன் மோதப் போகும் சந்தானம்.. குலுகுலு ரிலீஸ் எப்போ தெரியுமா?

     கடைசி வரைக்கும் சொல்லலையே

    கடைசி வரைக்கும் சொல்லலையே

    ஆனால் நம்பிக்கையுடன் இருந்த ரசிகர்களே குழப்பமடையும் விதத்தில் டீசர் விழா பற்றிய தகவல்கள் வந்தன. முதலில் ஜுலை 8 தஞ்சையில் நடக்கும் என தகவல் கசிந்தது. பிறகு நடக்காது என தகவல் வந்தது. ஆனால் படக்குழு எதுவுமே சொல்லாமல், கடைசி வரை மெளனம் காத்தது. வரிசையாக படத்தின் கேரக்டர்கள் பற்றிய போஸ்டரை வெளியிட்டது.

    பெயரில் கூடவா சொதப்பல்

    பெயரில் கூடவா சொதப்பல்

    அந்த போஸ்டரிலும் கேரக்டர்களின் பெயர்களை தமிழில் குறிப்பிடுவதில் பல எழுத்துப்பிழைகள் இருந்தன. கல்கி பயன்படுத்திய பெயர்களை தவறாக குறிப்பிட்டதுடன், அது சுட்டிக் காட்டப்பட்ட பிறகு பழைய புத்தகங்களில் குறிப்பிடப்பட்டதை எடுத்துக் காட்டாகவும் கூறினர். இதனால் ரசிகர்கள் கடுப்பாகினர். டீசர் வெளியீட்டு விழாவை முதல் நாள் மாலை தான் உறுதி செய்தனர். ஒரு டீசர் வெளியீட்டு தேதியை அறிவிப்பதில் ஏன்ப்பா இத்தனை குழப்பம் என சோஷியல் மீடியாவில் ஆதங்கத்தை கொட்டி தீர்த்தனர்.

    மற்றவர்களை சொல்லும் பார்த்திபனே வரல

    மற்றவர்களை சொல்லும் பார்த்திபனே வரல

    உடல்நிலை சரியில்லாததால் விக்ரம் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, சரத்குமார், விக்ரம் பிரபு போன்ற ஒரு சில நடிகர் நடிகைகள் மட்டும் விழாவில் கலந்து கொண்டனர். இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள படத்தின் டீசர் ரிலீசிற்கு ஒரு சிலரை மட்டுமே அழைத்து வந்திருந்தார்கள். தங்கள் பட விழாவிற்கே வர மறுக்கிறார்கள் என மற்ற நடிகர், நடிகைகளை விமர்சிக்கும் பார்த்திபன் கூட இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை என விழாவில் கலந்து கொண்டவர்கள், மிஸ் ஆனவர்கள் என பெரிய லிஸ்டை தேடி தேடி வெளியிட்டு வருகின்றனர்.

    இவங்களையாவது கூப்பிட்டிருக்கலாம்

    இவங்களையாவது கூப்பிட்டிருக்கலாம்

    படத்திற்கு பெரிய ஹைலைட்டாக பார்க்கப்படும் விஷயங்களில் ஒன்று ஐஸ்வர்யா ராய். அவரை கூட விழாவிற்கு அழைத்து வர தவறி விட்டனர். இதே போல் பொன்னியின் செல்வன் டீசர் ரிலீஸ் என்றதுமே முதலில் வைரலாக்கப்பட்டது படம் பற்றி பல மாதங்களுக்கு முன் ரஜினி பேசிய வீடியோ தான். பொன்னியின் செல்வன் நாவலால் ஈர்க்கப்பட்ட ரஜினியை அழைத்து வந்து கூட டீசரை வெளியிட்டிருந்தால் மாஸாக இருந்திருக்கும். இந்தியில் அமிதாப், மலையாளத்தில் மோன்லால் என்றதும் தமிழ் டீசரை ரஜினி தான் வெளியிட போகிறார் என நினைத்து எதிர்பார்த்த அத்தனை பேரையும் படக்குழுவினர் ஏமாற்றி விட்டனர். ரஜினி, கமலை கூட கூப்பிடாமல் இப்படி பண்ணிட்டிங்களேப்பா என வருத்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

    அண்ணாச்சி கலக்குறார்...நீங்க சொதப்புறீங்க

    அண்ணாச்சி கலக்குறார்...நீங்க சொதப்புறீங்க

    பெரிய அளவில் பேசப்படாமல் இருந்த அண்ணாச்சியின் தி லெஜண்ட் படத்திற்கு கூட பல நாட்களுக்கு முன்பே டிரைலர் ரிலீஸ் தேதியை வெளியிட்டு, அதில் 10 ஹீரோயின்கள் கலந்து கொள்ள போவதாக அறிவித்து ஹைப் ஏற்றினார்கள். சொன்னபடியே விழாவை நடத்தி அனைவரையும் அசர வைத்து, கலக்கினார் அண்ணாச்சி. ஆனால் ஒட்டு மொத்த சினிமா உலகமும் எதிர்பார்க்கும் இவ்வளவு பெரிய படத்திற்கு டீசர் ரிலீஸ் தேதியை உறுதியாக அறிவிக்க முடியாமல் நீங்க திணறிக்கிட்டு இருக்கீங்க. டீசர் ஓகே தான், ஆனால் நீங்கள் செய்வதை பார்த்தால் படத்தை நினைக்கும் போதே பயமா இருக்கு என நெட்டிசன்கள் குமுறி வருகின்றனர்.

    ரசிகர்களை இப்படியா ஏமாற்றுவது

    ரசிகர்களை இப்படியா ஏமாற்றுவது

    டீசர் ரிலீஸ் விழாவில் ரசிகர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. விழாவில் கலந்து கொண்ட சில நடிகர்களும் சரி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரும் படம் பற்றி சரியாக பேசாமல் சொதப்பினர். ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த, பெரிய அளவில் கொண்டாடப்பட்டிருக்க வேண்டிய விழாவை ஏன் இப்படி சொதப்பினார்கள் என ரசிகர்கள் தற்போது வரை குழப்பத்துடனேயே கேட்டு வருகின்றனர்.படத்தை இவ்வளவு பிரம்மாண்டமாக இயக்கிய மணிரத்னம் இந்த விஷயங்களை ஏன் கவனிக்காமல் இப்படி செய்தார் என ரசிகர்கள் தங்கள் ஆதங்கங்களை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

    English summary
    Fans get disappointment on Ponniyin selvan team. They finalised the teaser release on the last time. Most of the actor, actresses of the movie was not attending the event. Fans eagerly waiting for Rajini, Aishwarya Rai's appearance. But movie team didn't invite them.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X