பிக்பாசில் தாமரையின் ஒரு வார சம்பளம் இவ்வளவா?... ஆச்சரியத்தில் ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நிறைவு கட்டத்தை எட்டி உள்ளது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது 5 பேர் இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளனர். இவர்களில் யார் டைட்டிலை வெல்ல போகிறார்கள் என தெரியவில்லை. போட்டியாளர்களுக்காக சின்னத்திரையை சேர்ந்த பலர் சோஷியல் மீடியாவில் ஓட்டுக் கேட்டு வருகிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு 100 நாட்களை கடந்து விட்டது. மொத்தம் 106 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என கூறி இருந்தனர். ஆனால் ஃபைனல் எப்போது நடைபெறுகிறது என்ற தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. கொரோனா பரவலால் நிகழ்ச்சிகள் நடத்த தடை இருப்பதால் ஃபைனல் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்ற சந்தேகமும் இருந்து வருகிறது.

வெளியேறிய தாமரை
இதற்கிடையில் பைனலுக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட சிபி, 12 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு பிக்பாசில் இருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து எவிக்ஷன் மூலம் தாமரையும் வெளியேற்றப்பட்டார். தாமரை வெளியேற்றப்பட்டது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமலே இந்த முடிவு தனக்கு வருத்தமளிப்பதாக கூறினார்.

லைவில் வந்த தாமரை
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த தாமரை, ஐக்கி பெர்ரியுடன் இணைந்து லைவில் ரசிகர்களுடன் பேசினார். தொடர்ந்து ஃபோட்டோ வெளியிடுவது, வீடியோ வெளியிடுவது னெ பிசியாக இருந்து வருகிறார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தாமரை பெற்ற சம்பளம் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

இவ்வளவு சம்பளமா
பிக்பாஸ் வீட்டில் இருக்க தாமரைக்கு ஒரு வாரத்திற்கு ரூ.70,000 சம்பளம் பேசப்பட்டதாம். மொத்தமாக 14 வாரங்கள், அதாவது 98 நாட்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தாமரை இருந்துள்ளார். இதற்கு மொத்தமாக ரூ.9,80,000 தாமரைக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாம். இதில் 30 சதவீதம் வரியாக பிடித்துக் கொண்டு மீதமுள்ள தொகையை தான் தாமரைக்கு தருவார்களாம்.

பணப்பெட்டியையே எடுத்திருக்கலாம்
இந்த தகவல் வெளியானதில் இருந்து, 12 லட்சம் பணப்பெட்டியை தாமரை எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் பலர் சோஷியல் மீடியாக்களில் கூறி வருகிறார்கள். அதே சமயம் தான் சார்ந்த நாடக துறைக்காக தான் இந்த போட்டியில் தொடர நினைத்ததாகவும், 12 லட்சத்தை எடுத்திருந்தால் அது தனிப்பட்ட தனக்காக விளையாடியது போல் ஆகி விடும். என்னை நம்பி, எதிர்பார்த்தவர்களுக்கு அது ஏமாற்றத்தை தரும் என முதல் லைவ் நிகழ்ச்சியிலேயே தாமரை விளக்கம் அளித்து விட்டார்.
Recommended Video

இவங்க சம்பளம் எவ்வளவு
தாமரைக்கு குறைவான சம்பளம் கிடைக்கும் என்பது பற்றி கவலைபட்டாலும், தாமரைக்கே ஒரு வாரத்திற்கு ரூ.70,000 சம்பளம் பேசப்பட்டிருக்கிறது என்றால் பிரியங்கா, ராஜு போன்ற பிரபலமானவர்களுக்கு எவ்வளவு சம்பளம் பேசப்பட்டிருக்கும் என கேட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











