எஸ்ஜே சூர்யாவின் இறவாக்காலம் படம் ரிலீசாகுமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சென்னை : இயக்குனரும் நடிகருமான எஸ்ஜே சூர்யாவின் மாநாடு படம் சமீபத்தில் ரிலீசாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள எஸ்ஜே சூர்யாவின் இறவாக்காலம் படம் ரிலீசாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நடிகர் எஸ்ஜே சூர்யா

நடிகர் எஸ்ஜே சூர்யா

நடிகர் எஸ்ஜே சூர்யா சமீபத்தில் வெளியான மாநாடு படத்தில் சிறப்பான கேரக்டரில் நடித்துள்ளார். அவரது இந்த நடிப்பு பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

சிறப்பான இயக்குனர்

சிறப்பான இயக்குனர்

சிறப்பான பல படங்களை இயக்கியவர் எஸ்ஜே சூர்யா. இவரது குஷி, வாலி உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய படங்களாக அமைந்திருந்தன. தொடர்ந்து மற்ற ஹீரோக்களை விட்டுவிட்டு தானே ஹீரோவாக நடித்து சில படங்களை இயக்கி இருந்தார் எஸ்ஜே சூர்யா. இந்தப் படங்களும் அவருக்கு சிறப்பாக கைகொடுத்தன. தொடர்ந்து மற்ற இயக்குனர்களின் இயக்கத்திலும் எஸ்ஜே சூர்யா நடித்து வருகிறார்.

நடிகராக எஸ்ஜே சூர்யா

நடிகராக எஸ்ஜே சூர்யா

நண்பன், இறைவி போன்ற படங்கள் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்துள்ளன. ரசிகர்கள் மத்தியிலும் இவர் சிறந்த நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான மாநாடு படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று தந்துள்ளது.

காவல் அதிகாரியாக எஸ்ஜே சூர்யா

காவல் அதிகாரியாக எஸ்ஜே சூர்யா

இந்த படத்தில் காவல் அதிகாரியாக எஸ்ஜே சூர்யா நடித்துள்ளார். இந்த படத்தில் அவர் பேசும் ஒருசில டயலாக்குகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

மாநாடு படம் அவருக்கு அனைத்து தரப்பினர் இடையே பாராட்டுகளை பெற்று தந்துள்ளது. அவருக்கு தொடர்ந்து ரசிகர்களும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

குஷியில் எஸ்ஜே சூர்யா

குஷியில் எஸ்ஜே சூர்யா

இதன்மூலம் மிகவும் குஷியாக உள்ளார் எஸ்ஜே சூர்யா. இந்தப்படத்தின் வரவேற்பை அடுத்து அவரது முந்தைய படமான ரிலீசாகாமல் உள்ள இறவாக்காலம் படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்தப் படத்தில் எஸ்ஜே சூர்யா, வாமிகா மற்றும் சிவதா உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குடும்ப செண்டிமெண்ட் மற்றும் அதில் ஏற்படும் சிக்கல்களை இந்தப்படம் கதைக்களமாகக் கொண்டுள்ளது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இயக்குனர் அஸ்வின் சரவணன்

இயக்குனர் அஸ்வின் சரவணன்

மாயா படம் மூலம் ரசிகர்களை கவர்ந்த அஸ்வின் சரவணன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். அவரின் அடுத்தப் படமான கேம் ஓவர் படமும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள தேனாண்டாள் பிலிம்சின் இந்த இறவாக்காலம் படம் ரிலீஸ் ஆகாதது ரசிகர்களை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X