»   »  கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்! #Kaththi Sandai

கத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்! #Kaththi Sandai

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக வெளியாகிவிட்டது பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கத்தி சண்டை படம். இந்த வாரம் நான்கு படங்கள் வெளியாகின.

கத்தி சண்டையுடன் வெளியான பலே வெள்ளையத் தேவா, நேர்முகம், மணல் கயிறு 2 போன்ற படங்களுக்கெல்லாம் கிடைக்காத அளவுக்கு நல்ல, கணிசமான அரங்கள் கத்தி சண்டைக்கு கிடைத்தன.

Fans give overwhelming reception for Vadivelu #Kaththi Sandai

எனவே இந்த வாரத்தின் பெரிய ரிலீஸாக அமைந்தது கத்தி சண்டை.

வடிவேலுவின் ரீ என்ட்ரி படம் என்பதால் அவரது நகைச்சுவைக்கு ரசிகர்களாக உள்ள பலர் முதல் நாளே தியேட்டர்களுக்குப் படையெடுத்தனர்.

படத்தில் முதல் பாதி முழுவதும் சூரிதான் காமெடி பண்ணுகிறார். வடிவேலு வரமாட்டார். வடிவேலு எப்போது வருவார் என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்கள், அவர் தலையைக் கண்ட உடனே கைத்தட்டி ஆர்ப்பரித்து வரவேற்றனர். கவுண்டமணிக்குப் பிறகு இந்த அளவு ரசிகர்கள் வரவேற்புத் தெரிவித்தது வடிவேலுவுக்கு மட்டும்தான் என்கிறார்கள்.

English summary
Fans are receiving Vadivelu with huge applause in theaters where Kaththi Sandai released.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil