Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் டிஆர் மொமென்ட்.. புலி ஞாபகங்கள்.. பிரிட்டோவுக்கு ஆர்மி தொடங்கிருவாய்ங்க போல!
சென்னை: மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் படத்தின் தயாரிப்பாளர் பிரிட்டோபேசிய பேச்சை பார்த்த ரசிகர்கள் அவரை கலாய்த்து மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
Recommended Video
விஜய் நடிப்பில் வெளியாக உள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. வழக்கமான விஜய் பட இசை வெளியீட்டு விழா போன்று இல்லாமல் ஹோட்டலில் எளிமையான முறையில் நடைபெற்றது.
மாஸ்டர் படத்தை விஜயின் மாமாவான சேவியர் பிரிட்டோ, தயாரிக்கிறார். நேற்று நடைபெற்ற விழாவில் சேவியர் பிரிட்டோ மனைவி, மகள் என குடும்பத்துடன் பங்கேற்றார்.

முடிப்பார்.. முடிப்பார்..
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் 5 நிமிடங்களுக்கும் குறைவாக பேச எடுத்துக்கொண்டனர். ஆனால் சேவியர், தன்பாட்டுக்கு அடித்து நகர்த்தினார். ஒவ்வொரு முறையும் அவர் என்ட் கார்டு போட வருவதை போல் பேசியதை பார்த்த ரசிகர்கள் இப்போது முடிப்பார்.. அடுத்து முடிப்பார்.. இத்துடன் முடித்து விடுவார்.. என எதிர்பார்த்து ஏமாற்றமடைந்தனர்.

இடைமறித்த பாவனா
ஒவ்வொரு முறையும் ஃபுல் ஸ்டாப் வைப்பது போன்றே பேசிய அவர் கமா வைத்து பேச்சை தொடர்ந்தார். ரசிகர்களும் இடையிடையே கைகளை தட்டி போதும் என்று இன்டைரக்ட்டாக கூறினார். ஒரு கட்டத்தில் தொகுப்பாளர்கள் குறுக்கிட்டு நீங்கள் பேசுவதை கேட்க ஆசையாகத்தான் இருக்கிறது.. ஆனால் என்று இடைமறிக்க, அதற்கு நன்றி என்ற பிரிட்டோ மீண்டும் தனது பேச்சை தொடர்ந்தார்.

பிரிட்டோ பிரசங்கம்
சரி போகட்டும் அவரே பேச்சை முடிக்கட்டும் என காத்திருந்தனர் ரசிகர்கள். பின்னர் ஒருவழியாக பேச்சை முடித்து விஜய்க்கு நன்றி கூறி சென்றார் பிரிட்டோ. இந்நிலையில் அவரது பேச்சை கிண்டலடித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர். ஆடியோ விழாவில் பிரிட்டோ பிரசங்கம் செய்து விட்டார் என கிண்டலாக கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.
|
கருணாஸ் மீம்ஸ்
ஆசிர்வாதம் டிவி + நித்தியானந்தா = சேவியர் பிரிட்டோ பேச்சு.. வேற லெவல் பஞ்ச் டயலாக்ஸ்.. நன்றி சார் ஒரு வழியாக கடைசியில் முடித்து விட்டீர்கள் என தயாரிப்பாளர் பிரிட்டோவின் பேச்சை குறிப்பிட்டு கருத்து பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன். சேவியர் பிரிட்டோவின் பேச்சு டார்லிங் படத்தில் கருணாஸ் கடவுளிடம் வேண்டுவதை போல் இருந்தது என அந்த படத்தை ஷேர் செய்து குறிப்பிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
பிரிட்டோ மாமா
ஏற்கனவே பிரிட்டோ மாமாவால் ஆடியோ லாஞ்சில் பிரேயர் பண்ணப்பட்டு விட்டது. நிஜமாவே நாங்கள் எல்லாம் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்தான் என கிண்டலடித்திருக்கிறார் இந்த நெட்டிசன். பிரிட்டோ மாமா பேச்சுக்கு பிறகு.. நான் டிவி ரிமோட்ட எங்க அம்மாக்கிட்ட கொடுத்து கிளம்பிட்டேன் என்று கலாய்க்கிறார் இந்த நெட்டிசன்.
|
விஜய் ரியாக்ஷன்
பிரிட்டோ மீம்ஸ் என ஏராளமான மீம்ஸ்களை ஷேர் செய்திருக்கிறார் இந்த நெட்டிசன். இயக்குநர் லோகேஷை படத்தின் தயாரிப்பாளரான பிரிட்டோ லைன் புரடியூசர் என்றதும் நடிகர் விஜய் லோகேஷை திரும்பி பார்த்து விட்ட லுக்கை ஜாலியாக பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.
|
புலி ஞாபகங்கள்
தலைவன் ஒருவனே அது என் பிரிட்டோ ஒருவனே என கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன். அதோடு பிரிட்டோ ஆர்மி என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்திருக்கிறார் இவர். மாஸ்டர் ஆடியோ லாஞ்சில் மற்றொரு டிஆர் மொமென்ட்.. புலி ஞாபகங்கள்.. பிரிட்டோ அஷோல் என நகைச்சுவையாக இருந்தது என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.
|
மாஸ்டருக்கு நான்
புலிக்கு டிஆர்.. மாஸ்டருக்கு நான் என பிரிட்டோ சொல்வதாக கலாய்த்திருக்கிறார் இந்த நெட்டிசன். ஆடியோ லாஞ்சா இல்ல ஞாயிற்றுக்கிழமை ஜபக்கூட்டமானே தெரியல.. சன் டிவி தான பாக்குறோம் ஆனா எனக்கு ஆசிர்வாதம் டிவி பார்த்த மாதிரி ஒரு பீலிங்கு என்கிறார் இந்த நெட்டிசன்.