லண்டனில் புது வீடு வாங்கிய குஷ்பு.. டீ கப் உடன் அவரே போட்ட ட்வீட்.. வாழ்த்தும் ரசிகர்கள்!

சென்னை: நடிகை குஷ்பு லண்டனில் தனது புதிய வீட்டில் தனது முதல் டீயை குடிக்கிறேன் என போட்ட ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.

சென்னையில் பிசியாக சீரியல்களிலும் படங்களிலும் நடித்து வந்த குஷ்பு என்ன திடீரென லண்டனில் வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டாரே என ஏகப்பட்ட ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சில ரசிகர்கள், இன்னமும் டவுட் உடனே லண்டனில் புது வீடு வாங்கிட்டீங்களா குஷ்பு என்றும் வினவி வருகின்றனர்.

லண்டனில் புது வீடு

லண்டனில் புது வீடு

நடிகை குஷ்பு லண்டனில் புது வீடு வாங்கி உள்ளதாகவும், அங்கே பால் காய்ச்சி முதன் முதலாக போட்ட டீயை குடிக்கும் போட்டோக்களை ஷேர் செய்து பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அடிக்கடி லண்டனுக்கு சென்று வந்த நடிகை குஷ்பு தற்போது அங்கேயே புதுசா ஒரு வீடு வாங்கி செட்டில் ஆகி விட்டாரா? என்றும் புது வீட்டுக்கு வாழ்த்துக்கள் என்றும் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

மகள் படிப்புக்காக

மகள் படிப்புக்காக

சமீபத்தில் தனது மகளின் படிப்புக்காக காலேஜ் வரை போயிட்டு வரேன் என விமானத்தில் இருந்தபடி போஸ்ட் ஒன்றை நடிகை குஷ்பு பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், லண்டனில் தனது மகள் படிப்புக்காக அங்கேயே ஒரு வீடு வாங்கி அவருடன் தங்கி பாதுகாத்து வருகிறாரா குஷ்பு என்றும் ரசிகர்கள் நடிகை குஷ்புவிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ரொம்ப அழகா இருக்கீங்க

ரொம்ப அழகா இருக்கீங்க

லண்டனில் உள்ள புதிய வீட்டில் இருந்து நடிகை குஷ்பு எடுத்துக் கொண்ட க்யூட்டான செல்ஃபி புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம அழகாக இருக்கீங்க குஷ்பு என வர்ணித்து வருகின்றனர். உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியதில் இருந்து மாடர்ன் உடைகளை அணிந்து கொண்டு ஏகப்பட்ட போட்டோக்களை எடுத்து போட்டு வருகிறார் நடிகை குஷ்பு.

குவியும் வாழ்த்துக்கள்

குவியும் வாழ்த்துக்கள்

லண்டனில் நடிகை குஷ்பு புது வீடு வாங்கியதற்காக ஏகப்பட்ட ரசிகர்கள் அவரது ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும், லண்டனில் உள்ள சில தோழிகள் மற்றும் ரசிகைகள் அப்படியே அருகே இருக்கும் எங்க வீட்டுக்கும் வந்து ஒரு நாள் காபி சாப்பிட்டு போங்க குஷ்பு என அழைப்பு விடுத்தும் வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X