»   »  மக்கள் சூப்பர் ஸ்டார்.... ராகவா லாரன்ஸுக்கு குவியும் கண்டனங்கள்!

மக்கள் சூப்பர் ஸ்டார்.... ராகவா லாரன்ஸுக்கு குவியும் கண்டனங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தன் பெயருக்கு முன் மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டுள்ள ராகவா லாரன்ஸை ரஜினி ரசிகர்களை அதிகமாக பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர்.

சமூக வலைத் தளங்களில் ராகவா லாரன்ஸை கலாய்த்தும், கண்டித்தும் ஏராளமான மீம்ஸ்கள் வெளியாகி வருகின்றன.

Fans strongly condemn Raghava Lawrence

ரஜினிகாந்தால் திரையுலகுக்கு வந்தவர் ராகவா லாரன்ஸ். ரஜினி சிபாரிசு செய்ததால்தான் இவர் டான்ஸ் மாஸ்டர் ஒருவரிடம் உதவியாளராகச் சேர்ந்தார். பின்னர் ரஜினி தன் அனைத்துப் படங்களிலும் லாரன்சுக்கு வாய்ப்பு வழங்கினார். பாபா, சிவாஜி போன்ற பெரிய படங்களிலும் லாரன்ஸுத்து வாய்ப்புத் தந்தார்.

தன்னை ரஜினியின் தீவிர ரசிகனாகக் காட்டிக் கொள்ளும் லாரன்ஸ், தன் படங்களில் ரஜினி படம், பெயர், காட்சிகள் வரும்படி செய்து, ரஜினி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். பின்னர் ரஜினி படத் தலைப்புகளை தன் படங்களுக்குப் பயன்படுத்த ஆரம்பித்தார். தலைவர் ரசிகர்தானே என்ற நினைப்பில் ராகவா லாரன்ஸுக்கு அமோக ஆதரவு அளித்து வந்தனர் ரஜினி ரசிகர்கள். ரஜினி மன்ற விழாக்களுக்கு சிறப்பு விருந்தினராக லாரன்ஸை அழைத்து கவுரவித்து வந்தனர்.

இப்படியெல்லாம் இருந்த ராகவா லாரன்ஸ் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் தன்னை மக்கள் சூப்பர் ஸ்டார் என்று போட்டுக் கொண்டது ரஜினி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ரஜினி ரசிகர்களைவிட, பொதுவான சினிமா ரசிகர்கள் ராகவா லாரன்ஸை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

'உனக்கே இது ஓவராத் தெரியலியா ராகவா?', 'நீ மக்கள் சூப்பர் ஸ்டார்னா... அவர் என்ன ஏலியன்ஸுக்கு சூப்பர் ஸ்டாரா?' என்றெல்லாம் போட்டுத் தாக்கி வருகிறார்கள்.

'தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நம்பிக்கை துரோகி ராகவா லாரன்ஸ்தான். ஜல்லிக்கட்டுப் போராட்டத்திலேயே லாரன்ஸ் சாயம் வெளுத்துவிட்டது. இப்போது ரஜினியை விட உயர்ந்த இடத்தில் தான் இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தப் பார்க்கிறார்... நிச்சயம் இதற்கான பலனை அனுபவிப்பார்' என்று ரஜினி ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
Cinema fans strongly condemned Raghava Lawrence for calling himself as Makkal Superstar.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil