இரவின் நிழல் சர்ச்சை.. பார்த்திபன் போட்ட விளக்க ட்வீட்.. ப்ளூ சட்டை மாறனை விளாசும் ரசிகர்கள்!

சென்னை: இரவின் நிழல் படம் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை. இயக்குநர் பார்த்திபன் மக்களை ஏமாற்றுகிறார் என ப்ளூ சட்டை மாறன் போட்ட ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் பார்த்திபன்.

Recommended Video

Iravin Nizhal Public Review |Iravin Nizhal Review | Iravin Nizhal Movie Review |R Parthiban |*Review

வார வாரம் சினிமா பிரபலங்களுடன் வாதம் செய்வதையே வேலையாக கொண்டு செயல்பட்டு வருகிறார் இயக்குநரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன்.

இந்த வாரம் அவருக்கு பார்த்திபனின் இரவின் நிழல் படம் சிக்கி இருக்கிறது. அந்த படத்தை தவறாக புரமோட் செய்து விட்டார் பார்த்திபன் என அவர் போட்ட ட்வீட்டுக்கு கீழே ஏகப்பட்ட ரசிகர்கள் திட்டி வந்த நிலையில், நடிகர் பார்த்திபன் போட்ட ட்வீட்டுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ப்ளூ சட்டை மாறன் வாதம்

ப்ளூ சட்டை மாறன் வாதம்

பார்த்திபன் இயக்கி நடித்துள்ள இரவின் நிழல் திரைப்படம் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் இல்லை என்றும் ஃபிஷ் அண்ட் கேட் எனும் ஈரானிய திரைப்படம் தான் உலகின் முதல் சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம் என ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள ட்வீட் டிரெண்டான நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து சில விளக்க ட்வீட்களை நடிகர் பார்த்திபன் போட்டுள்ளார்.

பார்த்திபன் விளக்கம்

பார்த்திபன் விளக்கம்

விமர்சனங்கள் யாவும் விமோசனங்கள் என நான் நன்றியுடன் நெகிழ, சனங்களோ உலக level-ல் ஒன்றென உருக, நண்பர் blue sattai மாறன் அவர்களின் மாறுபட்ட விமர்சனத்தையும் பார்த்து விட்டு படம் பார்க்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன். அதுசரி! எதுசரி என விளங்க!..Google-ல் அவர் சொல்லும் படம் ‘non-linear'என்ற வரிசையில் இல்லை.இன்றும். அவர் அளவுக்கு நான் அறிவுஜீவி இல்லை ! Film critic Mr saibal Chatterji உள்ளிட்ட பலரிடம் படம் காட்டி உறுதி செய்துக் கொண்டேன்.

சொல்லி இருக்கலாமே

சொல்லி இருக்கலாமே

குறைந்த பட்சம் ஒரு வருடமாக இப்படத்தை ‘the world's first non-linear shot movie' என விளம்பர படுத்தி வரும் என்னிடம் அவரே இப்படி ஒரு படம் இருப்பதாக சொல்லியிருக்கலாம். 15 தினங்களுக்கு முன் நானே அவரை தொலைப்பேசியில் spl show பார்க்க அழைத்தேன்.அப்போதாவது என்னிடம் இதை சொல்லி என்னைத் திருத்தி,மக்களை நான் ஏமாற்றுவதைத் தடுத்து ஆபத்பாந்தவனாகி இருக்கலாம். அவர் படம்(அழைத்தும் நான்) போகவில்லை என்பதென் வருத்தமே! விமர்சகர் என்பதை மீறி இயக்குனர் என்பதால் அவர் மீது இன்றும் மரியாதயே! என பார்த்திபன் ட்வீட்களாக போட்ட நிலையில் ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து ப்ளூ சட்டை மாறனை விளாசி வருகின்றனர்.

விளாசும் ரசிகர்கள்

விளாசும் ரசிகர்கள்

"ஏங்க..நீங்க..இப்படி இருக்கீங்க.?! அவர் ஒரு ஆளுன்னு அவருக்கு விளக்கம் சொல்லிட்டு இருக்கீங்க.?! என கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர் ரசிகர்கள். உலக சினிமா எடுக்குற நீங்களாம் அந்த mobile cameraல படம் எடுக்குறவருக்கு பதில் சொல்லி உங்க பொண்ணான நேரத்த வீணாக்காதீங்க சார்" என விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X