»   »  கமல் ஹாஸன் பட நடிகை மரணம் என தீயாக பரவிய வதந்தி

கமல் ஹாஸன் பட நடிகை மரணம் என தீயாக பரவிய வதந்தி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை பரிதா ஜலால் இறந்துவிட்டதாக இணையதளங்களில் வதந்தி பரவியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகை பரிதா ஜலால்(68). அம்மா கதாபாத்திரங்கள் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இறந்துவிட்டதாக நேற்று மாலை வதந்தி பரவியது.

Farida Jalal Is Alive! Fake News On Her Death Surfaces Online

நான் சாகவில்லை இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன் என்று அவர் தனது செய்தித் தொடர்பாளர் மூலம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இந்த வதந்தி எல்லாம் எங்கிருந்து கிளம்புகிறது என்றே தெரியவில்லை. முதலில் வதந்தியை கேட்டு சிரித்தேன். ஆனால் தொடர்ந்து பலர் போன் செய்து விசாரிக்கத் துவங்கியதும் எரிச்சல் தான் வந்தது என தெரிவித்துள்ளார். பரிதா ஜலால் கமல் ஹாஸனின் ஹே ராம் படத்தில் நடித்துள்ளார்.

முன்னதாக அமிதாப் பச்சன் உள்ளிட்ட பிரபலங்கள் இறந்துவிட்டதாக வதந்தி பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fake news of Farida Jalal's death has surfaced online and the actress is quite miffed with all the developments surrounding to it.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil