»   »  இன்றைய ரிலீஸில் எது ஹிட் அடிக்கும்?

இன்றைய ரிலீஸில் எது ஹிட் அடிக்கும்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
கலகலப்பு 2, சொல்லிவிடவா மற்றும் சவரக்கத்தி.. படம் தேறுமா ?

சென்னை : பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று தமிழ் சினிமாவில் நான்கு படங்கள் வெளியாகின்றன.

இயக்குநர்கள் மிஷ்கின், ராம் நடித்திருக்கும் 'சவரக்கத்தி', ஜீவா, சிவா, ஜெய் நடித்திருக்கும் 'கலகலப்பு 2', அர்ஜுன் நடித்து, இயக்கி, தயாரித்திருக்கும் 'சொல்லிவிடவா', புதுமுகங்களின் நரிவேட்டை என நான்கு படங்கள் திரைக்கு வருகின்றன.

இவைதவிர, பாலிவுட்டின் பெரும் எதிர்பார்ப்பு மிகுந்த 'பேட் மேன்' திரைப்படமும் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது.

சவரக்கத்தி

சவரக்கத்தி

இயக்குநர் மிஷ்கினினின் உதவியாளரான ஜி.ஆர்.ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சவரக்கத்தி'. இதில், கதையின் மிக முக்கிய வேடங்களில் இயக்குநர்கள் ராம், மிஷ்கின், நடிகை பூர்ணா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு மிஷ்கினே கதை-திரைக்கதை-வசனம் எழுதி, சொந்தமாகத் தயாரித்துள்ளார். அரோல் கொரேலி இசையமைத்துள்ளார்.

கலகலப்பு 2

கலகலப்பு 2

இயக்குநராக இருந்து, நடிகராக மாறிய சுந்தர் சி , மீண்டும் படம் இயக்குவதில் பிசியாகி 'கலகலப்பு 2' படத்தை இயக்கியுள்ளார். இதில் ஜீவா, ஜெய், சிவா, நிக்கி கல்ராணி, கேத்தரின் தெரசா, நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் காமெடி காக்டெயிலாக உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

சொல்லி விடவா

சொல்லி விடவா

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் தயாரித்து இயக்கியுள்ள படம் 'சொல்லிவிடவா'. இதில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா நாயகியாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கன்னடப்பட நாயகன் சந்திரன் குமார் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அர்ஜுனின் வழக்கமான தேசப்பற்று கதையும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இப்படத்தை தயாரித்து இயக்குவதுடன் முக்கிய வேடத்திலும் நடித்திருக்கிறார் அர்ஜுன்.

நரிவேட்டை

நரிவேட்டை

இன்றைய ரிலீஸ் ரேஸில் புதுமுகங்களின் 'நரி வேட்டை' என்கிற படமும் களத்தில் இறங்குகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஆகாஷ் சுதாகர் இயக்கியிருக்கிறார். சேனல் ஆகாஷ் ஸ்டுடியோ இப்படத்தை தயாரித்துள்ளது.

பேட்மேன்

பேட்மேன்

அக்‌ஷய் குமார், ராதிகா ஆப்தே, சோனம் கபூர் ஆகியோர் நடிப்பில் பெரும் வரவேற்புடன் இன்று வெளியாகிறது பாலிவுட் திரைப்படம் 'பேட் மேன்' (PadMan). தமிழரான அருணாசலம் முருகானந்தம் அவர்களின் வாழ்க்கையைப் பற்றிய கதை என்பதால் தமிழ் ரசிகர்களிடையேயும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

எது ஜெயிக்கும்

எது ஜெயிக்கும்

இன்று வெளியாகும் படங்களில் மிஷ்கினின் 'சவரக்கத்தி' படத்துக்கும், சுந்தர்.சி இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'கலகலப்பு 2' படத்திற்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இன்றைய ரிலீஸ் ரேஸில் எந்தப் படம் ஜெயிக்கும் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

English summary
Four tamil films are released today. Mysskin and Ram starrer 'Savarakkathi', Jiiva-Siva-Jai starring 'Kalakalappu 2', Arjun directed 'Sollividava' and newcomers 'Nari vettai'. Besides, Bollywood's most anticipated 'PadMan' movie has also been released today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil