»   »  மும்பையில் ரஜினி... இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்!

மும்பையில் ரஜினி... இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் பங்கேற்கிறார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பையில் இன்று இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார் ரஜினிகாந்த்.

ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இளையராஜா, தற்போது பால்கியின் ஷமிதாப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் பாடல்கள் இன்று மும்பையில் வெளியாகின்றன.

இளையராஜாவுக்கு பாராட்டு விழா

இளையராஜாவுக்கு பாராட்டு விழா

இந்த நிகழ்ச்சியை இளையராஜாவுக்கான பாராட்டு விழாவாக நடத்த முடிவு செய்த பால்கி, அதற்கான ஏற்பாடுகளை கடந்த சில தினங்களாகச் செய்து வந்தார். அமிதாப் பச்சன் தலைமையில் இந்த விழா நடக்கிறது.

கச்சேரி

கச்சேரி

இந்த விழாவில் இளையராஜா பங்கேற்று ஷமிதாப் பட பாடல்களை நேரடி கச்சேரியாக நடத்துகிறார். இளையராஜாவின் பிற பாடல்களும் இந்த கச்சேரியில் பாடப்படுகின்றன. அமிதாப் பச்சனும் இந்த நிகழ்ச்சியில் பாடுகிறார்.

பாலிவுட்

பாலிவுட்

இந்த விழாவில் மும்பையைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர்கள், பாடகர்கள் பங்கேற்கின்றனர். லதா மங்கேஷ்கர், ஆஷா பான்ஸ்லே உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

ரஜினி

ரஜினி

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார். இதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் மும்பை சென்றார் ரஜினி. இன்று மாலை நடக்கும் நிகழ்ச்சியில் அமிதாப், தனுஷ் ஆகியோர் பாடுவதை முன் வரிசையில் அமர்ந்து ரசிக்கப் போகிறார் ரஜினிகாந்த்.

கமல் ஹாஸன்

கமல் ஹாஸன்

நிகழ்ச்சியில் கமல் ஹாஸனும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து உறுதியான தகவல் இல்லை.

English summary
The team of Shamitabh is organising a concert to celebrate legendary music composer Ilayaraja's 1000-film run. Rajinikanth is going to attend the event and he already landed in Mumbai for the same.
Please Wait while comments are loading...