லிங்குசாமி பெண்ணாக இருந்தால்...சர்ச்சையை கிளப்பிய பிரபல டைரக்டர்களின் பேச்சு

சென்னை :சினிமாவில் பெண்கள் ஆபாசமாக சித்தரிக்கப்படுகிறார், சினிமாத்துறை பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல என்ற குற்றச்சாட்டு பல காலமாக முன் வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் சினிமாத்துறையை சேர்ந்த பலர் இந்த மறுத்தும் வருகிறார்கள்.

Recommended Video

The Warrior | நண்பர்களை இழக்கவில்லை.. கண்கலங்கிய Director Lingusamy

இந்த போதிலும் இந்த குற்றச்சாட்டுக்கள் உண்மை என்பது போல் பல சம்பவங்கள் தொடர்ந்து சினிமா துறையில் இருந்து வந்து கொண்டு தான் இருக்கிறது. சமீப காலமாக நடிகைகள் பலரும் தாங்கள் சந்தித்த பாலியல் தொந்தரவுகள் குறித்து ஓப்பனாக பேசி வருகிறார்கள்.

பாலியல் பலாத்கார குற்றங்களில் சிக்கி சினிமாத்துறையை சேர்ந்த பலரும் கைது செய்யப்படும் விவகாரங்களும் தினமும் நடந்து தான் வருகிறது. அதிலும் மீ டு விவகாரத்திற்கு பிறகு நடிகைகள் பலரும் பாலியல் தொந்தரவுகள் குறித்து வெளிப்படையாக பேட்டி அளிக்க துவங்கி விட்டனர்.சினிமாவை தாண்டி சின்னத்திரையிலும் தற்போது இது போன்ற பிரச்சனைகள் தலைதுக்க துவங்கி விட்டன.

டம்மியாகும் ஹீரோயின்கள்

டம்மியாகும் ஹீரோயின்கள்

இதே போல் சினிமாக்களில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் குறைந்து விட்டதாக மற்றொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. பல டாப் நடிகர்கள் நடிக்கும் படங்களில் குட ஹீரோயின்கள் பெயருக்கு மட்டும் வைக்கப்படுகிறார்கள். அல்லது பாடல்கள், காதல் சீன்கள், கவர்ச்சி காட்டுவதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறார்கள்.

எதிர்ப்பை கிளப்பிய டைரக்டர்கள் பேச்சு

எதிர்ப்பை கிளப்பிய டைரக்டர்கள் பேச்சு

பெண்களுக்கு எதிராக குற்றங்கள் சினிமாத்துறையில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் நிலையில், பிரபல டைரக்டர்கள் சிலர் மேடையில் பேசிய பேச்சுக்களை சுட்டிக் காட்டி அனைத்து மக்கள் அரசியல் கட்சி என்ற அமைப்பின் நிறுவன தலைவர் ராஜேஸ்வரி பிரியா தனது பேஸ்புக்கில் எதிர்ப்பு கருத்து வெளியிட்டுள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

லிங்குசாமி பெண்ணாக இருந்தால்

லிங்குசாமி பெண்ணாக இருந்தால்

அவர் தனது பேஸ்புக் பதிவில், லிங்குசாமி பெண்ணாக இருந்தால் நான் வெச்சுகுவேன்(பாரதி ராஜா அவர்கள் மேடையில் பேசியது).லிங்குசாமி பெண்ணாக இருந்தால் எத்தனை பேரை வைத்திருப்பார் என்பதே எனது சிந்தனை (பேசியவர் பார்த்தீபன் அவர்கள்)மேலும் பார்த்தீபன் அறிமுகமில்லாத பெண்ணை லிங்குசாமி வீட்டிற்கு அனுப்பி பிறந்தநாள் வாழ்த்து கூற சொன்னாராம். உடனே லிங்குசாமி அவர்கள்‌ போன் செய்து நீங்கள் அனுப்பிய பூச்செண்டு நன்றாக இருந்தது என்றாராம்.அடப்பாவிகளே உங்கள் வீட்டு பெண்களை சொன்னால் ஏற்று கொள்வீர்களா??

பெண்களை இப்படி தான் பார்ப்பீங்களா

பெண்களை இப்படி தான் பார்ப்பீங்களா

நீங்கள் கலைத் துறையில் சாதனையாளர்களாக இருக்கலாம்.உங்கள் பார்வையில் பெண் என்றாலே ஒன்னு வெச்சிகனும் இல்ல வெச்சிருப்பா அதுதானே ....எப்போது பெண்களை போகப் பொருளாக பார்க்காமல் சக உயிராக பார்ப்பீர்கள்? சினிமாத் துறையில் சீரழிந்த பெண்கள் பல்லாயிரம் பேர்.காரணம் நீங்கள்தான், மேடையிலேயே இவ்வளவு தைரியமாக பேசுகிறீர்கள் என்றால் உங்கள் மனதில் எவ்வளவு வன்மம் இருக்கும்.

ஆண்களே சிந்தியுங்கள்

ஆண்களே சிந்தியுங்கள்

பெண்கள் வாயை மூடி கொண்டு மட்டுமே இருப்பார்கள், என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்றுதானே.அடக்கம் தேவை உங்கள் பேச்சுக்கு என்பதனை ஆத்திரத்துடன் தெரிவித்து கொள்கிறேன்.பதிவினை படிக்கும் ஆண்கள் சிந்தியுங்கள் நமது வீட்டில் தேவதைகளாக வளர்க்கப்படும் பெண்கள் சமூகத்தில் எவ்வாறு பார்க்கபடுகிறாள்?. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவங்க கிட்ட நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது

இவங்க கிட்ட நாகரிகத்தை எதிர்பார்க்க முடியாது

ராஜேஸ்வரி பிரியாவின் இந்த பதிவிற்கு பலரும் ஆதரவு தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். உண்மைதான் அக்கா ஒரு சிலர் பெரிய மனிதர்கள் என்பதால் தாங்கள் எதை சொன்னாலும் சரி. எதை செய்தாலும் சரி தான் என்று நினைக்கும் போது அவர்களை உடனடியாக தட்டிகேக்க வேண்டும். ஆனால் இங்கு பலரும் அவர்களின் பணத்திற்காகவும் பட வாய்ப்புக்காகவும் எதுவுமே தெரியாததை போல கடந்து செல்கிறார்கள். தாங்கள் சொல்வது உன்மை தனக்கு என்று வரும்போது ஒரு மாதிரியும் அடுத்தவர்களுக்கு வரும்போது ஒருமாதிரி பேசுவதுமே சில மனிதர்களின் குணம் அதுவும் நாகரீகத்தை சினிமா காரர்களிடம் நீங்கள் எதிர் பார்ப்பது தவறு என பலரும் கமெண்ட் செய்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X