"தேவரை பத்தி தப்பா பேசாதீங்க".. மேடையில் மூண்ட சண்டை... பரபரப்பான தேவர் பட விழா!

சென்னை: "தேசிய தலைவர் தேவர்" திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் அரவிந்த்ராஜ், இயக்குநர்கள் ஆர்.வி.உதயக்குமார், பேரரசு, மோகன்ஜி, பஷீர், நடிகை கெளதமி, முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, R.K. சுரேஷ், கவிஞர் சினேகன், நூலாசிரியர் தவமணி, மற்றும் அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக தலைவர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

desiya thalaivar audio trailer

இந்நிகழ்ச்சியில் நூலாசிரியர் தவமணி பேசுகையில், படத்தின் இயக்குநர் படத்தை திறன்பட எடுக்கவில்லை. இது வரலாறா உங்களின் கற்பனை கதையா? இதில் எது உண்மை? இது தெரியாமல் பலரும் தேவரை பற்றி படம் எடுத்துவிட்டார் என்று சொன்னால் அது பெரிய மோசடி இல்லையா? தேவரைப் பற்றி படம் எடுக்கும் போது, எதற்கு முன்னும் பின்னும் மாறி இருக்கிறீர்கள். சினிமாவைப் போல ஏன் இரட்டை வேடம் போடுகிறீர்கள். இதுதான் வரலாறு என்றால், வரலாற்றை சொல்லுங்கள் இல்லை இது கற்பனை கதை என்றால் கற்பனை கதை என சொல்லுங்கள். நீங்கள் கற்பனையாக படம் எடுப்பதற்கு நாங்கள் ஆளில்லை.
படத்தில் 52 இடங்களில் திருத்தங்கள் இருக்கின்றன. அவற்றை சரி செய்து செய்த பிறகே திரைப்படத்தை வெளியிட வேண்டும் என்று கூறினார்.

தேவர் படவிழாவில் மோதல்: தவமணி இப்படி பேசியதால், ஆத்திரமடைந்த படத்தின் இயக்குநர் அரவிந்த் ராஜ், தேவையில்லாமல் பேசக்கூடாது என்று சொல்லிவிட்டு மேடையை விட்டு இறங்கியதால், தவமணிக்கும் இயக்குநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பேசி அரவிந்த் ராஜ், தேவரை பற்றி தப்பாக பேசுகிறேன், சதி செய்கிறேன் என்று தவமணி சொன்னது மிகவும் தவறு, தேவர்களுக்கு மட்டும் தேவர் சொந்தக்காரர் இல்லை. தேவர் அனைவருக்கும் சொந்தக்காரர். எனக்குத் தெரிந்து சிவாஜி கணேசன், சங்கிலி முருகன் இருவர் மட்டுமே திரைத்துறையில் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள். 'தேவர் மகன்' படத்தில் கமல் ஹாசன் கௌதமி, ரேவதி யாரும் தேவர் சமூகத்தை சேர்ந்தவர்கள் கிடையாது. அனைத்து மக்களுக்கும் பொதுவானவர் தேவர், கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என்றார்.

More from Filmibeat

Read more about: audio trailer ஆடியோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X