Just In
- 31 min ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 40 min ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 1 hr ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
- 1 hr ago
மீண்டும் பிக் பாஸ் புரமோ போட்ட விஜய் டிவி.. என்ன மேட்டர்னு நீங்களே பாருங்க.. சர்ப்ரைஸ் இருக்கு!
Don't Miss!
- Sports
களத்திற்கு வரும் சர்ச்சை வீரர்.. சிஎஸ்கே உட்பட குறி வைக்கும் 3 அணிகள்.. சம்பவம் நடக்கும் போலயே!
- Finance
ஜியோவுக்கு போட்டியாக வரும் ஸ்டார்லிங்க்.. முகேஷ் அம்பானி Vs எலான் மஸ்க்.. இனி ஆட்டமே வேற..!
- News
என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா ?
- Automobiles
தொடரும் பஜாஜ் பல்சர் பைக்குகளின் ஆதிக்கம்!! 2020 இறுதியிலும் தொடர்ந்துள்ளது!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கமல் - விவேக் ரசிகர்களிடையே மீண்டும் சண்டை... இவங்க பிரச்சினை ஓயவே ஓயாதா?
சென்னை: டிவிட்டர் நடிகர் கமல் மற்றும் நடிகர் விவேக் ரசிகர்களிடையே கடும் வார்த்தை போர் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடியனாகவும், குணச்சித்திர நடிகராகவும் தொடர்ந்து வருபவர் நடிகர் விவேக். ஒரு சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். தனது படங்களின் மூலம் சமூக அக்கறையுடன் பல நல்ல கருத்தைகளை தொடர்ந்து சொல்லி வரும் விவேக்கை அவரது ரசிகர்கள் சின்ன கலைவாணர் என்றே அழைக்கின்றனர்.
மறைந்த முன்னால் குடியரசு தலைவர் அப்துல் கலாம் மீது அதிக பற்று கொண்டவர் விவேக். அப்துல் கலாமிடம் கொடுத்த வாக்குறுதியின் காரணமாக நாடு முழுவதும் மரங்கள் வளர்ப்பதில் அதிக அக்கறை எடுத்து வருகிறார். இதுவரை லட்சக்கணக்கான மரங்களை தன்னார்வ தொண்டர்களுடன் சேர்ந்து அவர் நட்டுள்ளார்.
ஆர்யா, விஷாலைத் தொடர்ந்து சிம்பு வீட்டிலும் டும் டும் டும்.. சத்தமில்லாமல் நடக்கும் திருமண வேலைகள்!

விவேக் பற்றி கேலி
இந்நிலையில் விவேக்கின் இந்த மரம் நடும் செயலை கேலி செய்யும் வகையில் கமல் ரசிகர் ஒருவர் டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். அதில், "மரம் நட்டுவைக்கிறோம். தண்ணீர் உங்க அப்பனா தருவார். காமெடி வேலை என்னவோ அது ஒன்றே உமது வேலை. புரியுதா. புரியலனா தெரிஞ்சவர்கள் கிட்ட தெரிஞ்சிக்க முயற்சிசெய்வீர்", என அதில் குறிபிட்டிருந்தார்.
|
கண்ணியமான பதிவு
இதனை ரீடிவீட் செய்த விவேக், "இந்த மனிதரின் கண்ணியமான பதிவு உங்கள் பார்வைக்கு " என பதிவிட்டார். இதை பார்த்த விவேக் ரசிகர்கள் பலரும் கொந்தளித்துவிட்டனர். டிவீட் செய்த நபர் கமல் ரசிகர் என்பதால், விவேக்குடன் கமலை ஒப்பிட்டு பதிவிட்டனர். பதிலக்கு கமல் ரசிகர்களும் விவேக்கை கடுமையாக விமர்சிக்க தொடங்கிவிட்டனர். இதையடுத்து அந்த நபர் தனது டிவீட்டை டெலிட் செய்துவிட்டார்.
|
விவேக்கிற்கு ஆதரவு
விவேக்குக்கு ஆதரவாக பலர் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். அதில் ஒருவர், "வரும்காலங்களில் கோழி என்ற பறவையும் மாடு என்ற விலங்கும் மீன் என்ற நீந்தும் உயிரினமும்தான் இருக்கும்(மக்களின் தேவைக்காக).மத்ததெல்லாம் உறைவிடம் உணவு தண்ணீர் இல்லாமல் மடிந்துபோகும். மரம் வளர்ப்போம்..மழைபெறுவோம்..காடுகளை உருவாக்குவோம்", என குறிப்பிட்டுள்ளார்.
|
கவலை வேண்டாம்
மற்றொரு ரசிகர், "நீங்கள் இதை பற்றி எல்லாம் கவலை படாதீர்கள் அய்யா. நீங்கள் கலாம் அவர்களின் சொல்லுக்கினங்க எவ்வளவு மரம் நட்டு இருக்கிறீர்கள் என்பது நாடறியும். உங்கள் சேவை என்றும் தொடரட்டும்", என பதிவிட்டுள்ளார்.

தொடரும் மோதல்
இதுபோல் பலர் விவேக்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் பாஸ்கர் கமலுக்கு ஆதரவாகவும் சிலர் தங்கள் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு இந்தியன் 2 படம் தொடர்பாக அதேபோல் கமல் - விவேக் ரசிகர்களிடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.