twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கமல் ‘டெக்னிக்’கை மற்ற நடிகர்களும் பாலோ பண்ணலாமே... வசந்தபாலன் அட்வைஸ்

    |

    சென்னை: நடிகர் கமல் வழியை மற்ற நடிகர்களும் பின்பற்றினால் ரசிகர்களுக்கு கமர்சியல் படங்கள் மட்டுமல்லாமல் க்ளாஸிக் படங்களும் கிடைக்கும் என யோசனை தெரிவித்துள்ளார் இயக்குநர் வசந்தபாலன்.

    வெயில், அங்காடித் தெரு போன்ற வெற்றிப் படங்கள் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் வசந்தபாலன். இவர் தற்போது சித்தார்த், ப்ருத்விராஜ், வேதிகா, அனைகா உள்ளிட்ட பலர் நடிக்கும் 'காவியத்தலைவன்' படத்தை இயக்கியுள்ளார்.

    இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தனது சமூக வலைதளப் பக்கத்தில் நடிகர் கமல் குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் வசந்தபாலன்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது :-

    கம்ர்சியல் + க்ளாஸிக்...

    கம்ர்சியல் + க்ளாஸிக்...

    இன்று தற்செயலாக கமல்ஹாசன் அவர்களின் ஐ.எம்.டி.பி (imdp) யை நோண்டிக்கொண்டிருந்தேன். தன் காலத்தில், கமல் அவர்கள் ஒரு பக்கா கமர்சியல் படத்திற்கு நடுவே நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் ஒரு தரமான அழகான கலையம்சம் கொண்டு க்ளாஸிக் படத்தையும் பண்ணியுள்ளார்.

    கமலை வளர்த்த படங்கள்...

    கமலை வளர்த்த படங்கள்...

    அந்த படங்கள் தான் கமல் அவர்களை வளர்த்தது. மற்றவர்களில் இருந்து அவரை பிரித்து காட்டியது. இன்றுவரை நடிகர் கமல் அவர்களை பற்றி நம்மை பேச வைத்துள்ளது.

    உலக நாயகனே...

    உலக நாயகனே...

    அவருடைய நடிப்புத்திறமையையும் வெளியே கொண்டு வந்துள்ளது. நடிகர் திலகத்திற்கு பிறகு உலக நாயகன் தான் என்று சொல்ல வைத்தது.

    இந்தப் படங்கள் தான்...

    இந்தப் படங்கள் தான்...

    1982 மூன்றாம்பிறை சகலகலாவல்லவன், 1983 தூங்காதே தம்பி தூங்காதே சலங்கை ஒலி, 1984 ஒரு கைதியின் டைரி ஜப்பானில் ஒரு கல்யாணராமன், 1985 காக்கி சட்டை சிப்பிக்குள் முத்து, 1986 விக்ரம் புன்னகை மன்னன், 1987 நாயகன் வெற்றி விழா காதல் பரிசு, 1992 தேவர் மகன் சிங்காரவேலன், 1993 கலைஞன் மகராசன் மகாநதி, 1996 குருதிப்புனல் இந்தியன் அவ்வை சண்முகி

    நடிப்புத் திறமை...

    நடிப்புத் திறமை...

    இன்றைய காலக்கட்டத்தில் உள்ள தமிழ் கதாநாயகர்கள் கமல் அவர்களின் வழியை பின்பற்றினால் நமக்கு கமர்சியல் படங்களும் கிடைக்கும், நல்ல படங்களும் கிடைக்கும். அவர்களும் நடிப்புத்திறமையை நிருபிக்கக்கூடிய படங்களில் நடித்தது போல் ஆகிவிடும்.

    நன்றாக இருக்கும்...

    நன்றாக இருக்கும்...

    இந்த முறையைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும். ஆனால் யார் கமல் அவர்களை பின்பற்றுகிறார்கள்" என இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

    English summary
    The Tamil film director Vasanthabalan has adviced film makers to follow actor Kamalhasan, as he gives both commercial and realistic movies balancely.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X