»   »  கோயில்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை.. திரையுலகம் அதிருப்தி!

கோயில்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை.. திரையுலகம் அதிருப்தி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாரம்பரியம் மிக்க முக்கிய கோயில்களில் படப்பிடிப்பு நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கோலிவுட் பிரமுகர்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

தமிழ் சினிமா மற்றும் டிவி உலகினர் அதிகமாக ஷூட்டிங் நடத்தும் இடங்களில் கோவில்கள் முக்கியம் இடம் வகிக்கின்றன.

Film industry upsets over govt's ban to shoot in Temples

ஆனால் இந்த புராதான கட்டிட கலையை உயர்த்திப் பிடிக்கும் கோயில்களில், படப்பிடிப்பு நடத்துவதாகக் கூறிக் கொண்டு, சேதப்படுத்தி வந்ததால், இங்கெல்லாம் ஷூட்டிங் நடத்த மக்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

எனவே கோவில்களில் படப்பிடிப்பு நடத்த தற்போது அறநிலையத்துறை தடைவிதித்துள்ளது. இதனால், சினிமா பிரபலங்கள் பலரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

முன்பெல்லாம் பெரிய ஸ்டுடியோக்களில் நிரந்தரமாக கோயில் செட்கள் இருந்தன. படமாக்க வசதியாகவும் செலவு குறைவாகவும் இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. எனவேதான் கோயில்களை நாட வேண்டிவந்தது.

அதேபோல இந்த கோயில்களை சினிமாவில் காட்டுவது நமது பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்க உதவியாக இருந்தது. அதைத் தடுக்கும் வகையில் அரசு உத்தரவு அமைந்துள்ளதே என வருத்தம் தெரிவித்துள்ளனர்.

English summary
Tamil film industry has upset over the new order of Tamil Nadu to ban shooting in Temples.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil