»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் (பிலிம் சேம்பர்), தென்னிந்திய நடிகர் சங்கமும் இணைந்து செயல்படமுடிவு செய்துள்ளன.

திரைப்படத் தொழில் தொடர்பான பிரச்னைகளில் கூட்டாக முடிவெடுப்பது என்று இரு தரப்பினரும்தீர்மானித்துள்ளனர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவராக தயாரிப்பாளரும், டைரக்டருமான கேயார் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சார்பில் பாராட்டு விழா சென்னையில் செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.

நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த், செயலாளர் சரத்குமார், நெப்போலியன், சத்யராஜ், பிரபு, பிரபுதேவா, அஜீத்,அரவிந்த்சாமி மற்றும் பலர் கேயாரை பாராட்டிப் பேசினர்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கேயார், "இனிமேல் திரையுலகப் பிரச்னைகள் தொடர்பாகஇரு தரப்பினரும் சேர்ந்து செயல்படுவது என்றும், எல்லா விஷயங்களிலும் ஒருமித்த முடிவெடுப்பது என்றும்தீர்மானித்துள்ளோம்.

தனித்தனி அமைப்பாக இருந்தாலும் இரு தரப்பினரும் கூட்டாக செயல்பட்டால் திரையுலக பிரச்னைகளை எளிதில்தீர்க்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

கேயாரின் கருத்தை தாமும் வரவேற்பதாக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil