twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவையும் நல்ல படங்கள்தான், ஆனா விருது கிடைக்கலியேப்பா...!

    |

    சென்னை: கைத்தட்டல் தான் கலைஞர்களுக்கு உண்மையான விருது என்று சொல்லப்பட்டாலும், விருதுகளின் மீதான மயக்கங்களும் குறைவதில்லை.

    நேற்று, திரைப்படத்துறைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டன. 60 வது திரைப்பட விருதான இதில், சிறந்த பிராந்திய மொழி படமாக, வழக்கு எண் 18/9 அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய ராஜாவுக்கு சிறந்த ஒப்பனைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. லிங்குசாமி தயாரிப்பில் பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

    கமலின் 'விஸ்வரூபம்' படத்துக்கு சிறந்த நடனம், தயாரிப்பு வடிவமைப்பு என இரண்டு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஆடை வடிவமைப்பாளர் விருது 'பரதேசி' படத்திற்காக பூர்ணிமா ராமசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது.

    அதேசமயம், சிறந்த சுற்றுச்சூழல் படம், சமூகப்பிரச்னை, தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் படத்திற்கான விருதுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சினிமாக்களும் உண்டு. 2012ம் ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பல பெரிய படங்கள் தோல்வியையும், சிறிய பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்ற ஆச்சர்யங்களும் நடந்தன.

    சாட்டை

    சாட்டை

    2012ன் மிக முக்கியமான படம் என சான்றிதழைப் பெற்ற படம். பல ஊடக விருதுகளைப் பெற்றது. ஆனால் தேசிய விருது கிடைக்கவில்லை.

    துப்பாக்கி

    துப்பாக்கி

    ஏ.ஆர்.முருகதாஸ் என்ற பெயரே விருது கிடைக்கும் என்ற நம்பிக்கையை விஜய்க்குள்ளும், நமக்குள்ளும் விதைத்தது. ஆனால், ஏமாற்றமே கனியாக கிடைத்ததுள்ளது.

    நண்பன்

    நண்பன்

    இந்திய கல்வி முறையில் இருக்கும் குறைகளை சுட்டிய படம். ஹிந்தியில் பெற்ற ஹிட்டால், தமிழில் விஜய் 'குட்' பெற்றுக்கொண்ட படம். ரீமேக் படம் என்பதால் விருது தரவில்லையோ என்னவோ...

    நான் ‘ஈ’

    நான் ‘ஈ’

    ஹீரோவால் தான் படம் ஓடுகிறது என்ற இமேஜை ஒரு ‘ஈ' உடைத்தது. இதுவும் டப்பிங் படம் என்பதால் விருது கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கில் தட்டிக் கொண்டு போய் விட்டது.

    கும்கி

    கும்கி

    ராம நாராயணன் குரங்கை வைத்து வித்தை காட்டினார் என்றால், யானையை வைத்து தன் பலம் காட்டினார் பிரபு சாலமன். அனைவரையும் ஆட வைத்தது ‘சொய்ங்...சொய்க்...' பாட்டு. காட்டை கண்களுக்கு விருந்தாக்கினார் ஒளிப்பதிவாளர். அதிக விருதுகளை எதிர்பார்த்த படம். ஆனால் எதுவும் கிடைக்கவில்லை.

    சுந்தரபாண்டியன்

    சுந்தரபாண்டியன்

    சிறந்த மசாலா பொழுதுபோக்குப் படம். சசிகுமாரின் குடும்ப ‘டச்' உள்ள படம். இதுவும் விருது எதிர்பார்ப்புகளுக்குள் சிக்கிக்கொண்டிருந்தது. ஆனால் நிராசையாகி விட்டது.

    கலகலப்பு

    கலகலப்பு

    கலகலக்க வைத்த படம். சிரித்து, சிரித்து வயிறை புண்ணாக்கியது இந்த மசாலா கபே. விருது லெவலுக்கு இது தகுதி படைத்ததா என்பது தெரியவில்லை.

    அட்டக்கத்தி

    அட்டக்கத்தி

    ஹீரோனா இப்டித்தான் இருக்கணும்ற பிம்பத்தை மாற்றிய ஜாலியான படம் ரொம்ப கேஷுவலான கதையோட்டம். ரொம்ப வித்தியாசமான படம். விருதும் எதிர்பார்க்கப்பட்டது.

    காதலில் சொதப்புவது எப்படி?

    காதலில் சொதப்புவது எப்படி?

    இளைஞர்களின் மன ஓட்டத்தை ஜாலியாக சொன்ன படம். காதலிகளை சிந்திக்க வைத்த புதிய முயற்சி. குறும்படமாக உருவாகி, பெரும்படமாக மாறி அசத்திய படம் இது.

    ஒரு கல்.. ஒரு கண்ணாடி..

    ஒரு கல்.. ஒரு கண்ணாடி..

    கல்லும், கண்ணாடியுமாக, ஹன்சிகாவும், உதயநிதியும் நடித்த படம். ஆனால் ஹீரோ என்னவோ சந்தானம் தான். இந்தப் படத்திற்கு என்ன விருது கொடுத்திருக்கலாம்... உங்களுக்கு ஏதாவது தோன்றுகிறதா...?

    பீட்சா

    பீட்சா

    திகிலை திகட்ட திகட்ட ஊட்டிய படம். ஆனாலும் புதுமுகங்களை வைத்து அசத்திய படமும் கூட. நல்ல படங்களில் ஒன்றுதான். ஆனால் நாட்டின் உயரிய விருது எதுவும் கிடைக்கலியே...

    இப்படி நிறைய படங்கள் விருதுக்காக ஏங்கி நின்றன, எதிர்பார்ப்பில் இருந்தன. இருந்தாலும் கொத்துமல்லி போல கிள்ளிக் கொடுத்து விட்டார்கள் தேசிய விருதுக்காரர்கள்.. பரவாயில்லை, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் கய்ஸ்...!

    English summary
    This year's national film awards, announced on Monday was a mix of popular and off-beat films, with Malayalam and Hindi industry taking away the major awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X