”துணிவாக இருந்தாலும் முதலில் தளபதி என்ட்ரி தான்”: போஸ்டரில் அட்ராசிட்டி செய்யும் விஜய் ரசிகர்கள்

மதுரை: அஜித்தின் 61வது படத்தின் தலைப்பு நேற்று முந்தினம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியானது.

ஏகே 61 படத்தின் டைட்டில் துணிவு என அறிவித்துள்ள படக்குழு அஜித்தின் போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், அஜித்தின் துணிவு என்ற டைட்டிலை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அஜித்தின் துணிவு

அஜித்தின் துணிவு

அஜித்தின் 61வது படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிக்கும் இந்தப் படத்திற்கு 'துணிவு' என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை என அடுத்தடுத்து இரண்டு படங்களைக் கொடுத்த இந்தக் கூட்டணி, இப்போது துணிவு படத்தையும் ஹிட் கொடுக்க ரெடியாக உள்ளனர். அஜித் படங்களுக்கான டைட்டில் மாஸாக இருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்பும் நிலையில், தற்போது துணிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

மாஸ் ஹீரோவான அஜித் கடைசியாக நடித்த படங்களின் டைட்டில்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை எனக் கூறப்படுகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை டைட்டில்களைப் போல, இப்போது துணிவும் அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் வேறு வழியில்லாமல் அஜித் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். அதேநேரம் அஜித்தின் செம்ம ஸ்டைலிஷான ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக் போஸ்டர்கள் வேற லெவலில் ட்ரெண்டிங் ஆகி வருகின்றன.

மோதலில் ரசிகர்கள்

மோதலில் ரசிகர்கள்

அஜித்தின் துணிவு டைட்டில் போலவே, விஜய்யின் வாரிசு பட தலைப்பும் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றம் தான் என சொல்லப்படுகிறது. ஆனாலும் விஜய் ரசிகர்கள் வாரிசு பட டைட்டிலை கொண்டாடினர். இந்நிலையில், விஜய் - அஜித் ரசிகர்களிடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. விஜய்யும் அஜித்தும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், அதனை அவர்களது ரசிகர்கள் சிலர் புரிந்துகொள்வதாக இல்லை. ஆனால், இருதரப்பு ரசிகர்களும் காலங்காலமாக ஒருவரையொருவர் ட்ரோல் செய்து வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

மதுரையில் போஸ்டர்கள்

மதுரையில் போஸ்டர்கள்

இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த விஜய் ரசிகர்களின் அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமல் போயுள்ளது. ஏற்கனவே துணிவு பட டைட்டிலை, விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கிண்டல் அடித்து வருகின்றனர். இதனிடையே மதுரையில் உள்ள 'ராயல் கிங் விஜய் ரசிகர்கள்' வில்லங்கமான போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில், "துணிவாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, முதலில் தளபதி என்ட்ரி தான்" என கேப்ஷன் கொடுத்துள்ளனர்.

துணிவு பொங்கல் ரிலீஸ்?

துணிவு பொங்கல் ரிலீஸ்?

இந்த போஸ்டர்கள் சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றன. விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில், அஜித்தின் துணிவும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது. இதனை கலாய்க்கும் விதமாக தான் விஜய் ரசிகர்கள் இப்படி போஸ்டர் அடித்துள்ளனரா என்பதும் விவாதமாகியுள்ளது. இந்நிலையில், விஜய் ரசிகர்களுக்கு எதிராக அஜித் ரசிகர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என மதுரைவாசிகள் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X