முதல் மனைவியை வைத்து கேம் விளையாண்டாரா மாதம்பட்டி ரங்கராஜ்?.. ஜாய் கிரிஸில்டா போட்ட குண்டு
சென்னை: மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார் என்று ஜாய் கிரிஸில்டா புகார் அளித்தார். தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு ஜாயிடம் விசாரணை நடத்தியது. விரைவில் ரங்கராஜிடமும் விசாரிக்கவிருக்கிறது. இந்நிலையில் அண்மையில் ஜாய் கிரிஸில்டா அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
சமையல் கலைஞரும், நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருக்கிறார். திரைப்படம், சின்னத்திரை நிகழ்ச்சியைவிட கடந்த சில மாதங்களாக வேறு ஒரு விஷயத்தால் தலைப்பு செய்தியாகியிருக்கிறார் அவர். இயக்குநர் ஃபெட்ரிக்கின் முன்னாள் மனைவியான ஜாய் கிரிஸில்டாவுடன் அவருக்கு நடந்த இரண்டாவது திருமணம் கோலிவுட் திரைத்துறையில் பெரிய விவாதத்தையும், பஞ்சாயத்தையும் உண்டு செய்தது.
நோ டைவர்ஸ்: அதாவது தன்னுடைய முதல் மனைவியான ஸ்ருதியை விவாகரத்து செய்யாமலேயே ஜாயை ரங்கராஜ் திருமணம் செய்ததாக தெரிகிறது. ஆனால் கல்யாணம் செய்த சில நாட்களிலேயே கிரிஸில்டா கர்ப்பமாகிவிட்டார். அதேசமயம் அவரிடமிருந்து மாதம்பட்டியார் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்ததாகவும்; அதனால் காண்டான கிரிஸில்டாவோ அதிரடியாக தங்களக்கு நடந்த திருமணம் தொடர்பான புகைப்படங்களை வெளியிட்டார் என்றும் சொல்லப்படுகிறது.

ஸ்ருதியின் நிலைமை: அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ முதல் மனைவிக்கு மாதம்பட்டி ரங்கராஜ் துரோகம் செய்துவிட்டார்; இந்த பாவம் சும்மா விடாது என்று சபித்தார்கள். ஆனால் அவரோ இந்தப் புகைப்படங்கள் வெளியான சில நாட்களில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் அட்டென்டென்ஸ் போட்டார். இது இரண்டாவது மனைவியை உச்சக்கட்ட கோபத்துக்கு இழுத்து சென்றது.
புகாரும் விசாரணையும்: உடனடியாக சுதாரித்துக்கொண்ட ஜாய் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து மாதம்பட்டி ரங்கராஜ் மீது புகார் கொடுத்தார். அந்தப் புகார் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு ஜாய் கிரிஸில்டாவிடம் சில நாட்களுக்கு முன்பு கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டது.கூடிய விரைவில் மாதம்பட்டியாரிடம் காவல் துறையினர் தங்களது விசாரணையை தொடங்கவிருக்கிறார்கள்.
ட்ரெண்டாகும் பேட்டி: இந்நிலையில் ஸ்ருதி குறித்து ஜாய் கிரிஸில்டா அண்மையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், "ரங்கராஜின் முதல் மனைவிக்கு எல்லாமே தெரியும். அவருக்கு தெரியாமல் இந்தக் கல்யாணம் நடந்தது. இது ஒரு திருட்டு கல்யாணம் என்றுதான் எல்லோரும் நினைக்கிறார்கள். ஆனால் ஸ்ருதிக்கு தெரியும். ஒருமுறை என்னிடம் வந்து, ' தங்கம் நான் அவகிட்ட சொல்லிட்டேன். அவளுக்கு எந்த பிரச்னையும் இல்லை' என ரங்கராஜ்தான் கூறினார்" என்றார்.


Click it and Unblock the Notifications











