»   »  காஞ்சனா 2... லாரன்ஸ் 'பேயி'ன் ஃபர்ஸ்ட் லுக் பாக்கறீயளா..?

காஞ்சனா 2... லாரன்ஸ் 'பேயி'ன் ஃபர்ஸ்ட் லுக் பாக்கறீயளா..?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ராகவா லாரன்ஸ் இயக்கிய முனி படம் செம த்ரில்லிங் என்றாலும், அன்றைக்கு எதிர்ப்பார்த்த அளவுக்குப் போகவில்லை.

ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அதன் தொடர்ச்சி என்ற பெயரில் இயக்கி வெளியிட்ட காஞ்சனா, சக்கைப் போடு போட்டது. பேய்ப் பட வரிசையில் அந்தப் படம் புது ட்ரெண்டை உருவாக்கியது என்றாலும் மிகையல்ல.

இப்போது காஞ்சனாவின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறார் லாரன்ஸ்.

முனி 3 அல்ல...

முனி 3 அல்ல...

இந்தப் படத்துக்கு முதலில் முனி 3 என்றுதான் பெயரிட்டிருந்தனர். பின்னர் அந்தப் பெயரை காஞ்சனா 2 என்று மாற்றிவிட்டதாக லாரன்ஸ் அறிவித்தார்.

முதல் தோற்றப் போஸ்டர்கள்

முதல் தோற்றப் போஸ்டர்கள்

இப்போது படத்தின் முதல் தோற்றப் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. உடம்பு முழுக்க மஞ்சள் பூசி, நெற்றியில் திருநீற்றுப் பட்டை தீட்டி ஆக்ரோஷப் பார்வையுடன் காட்சி தருகிறார் லாரன்ஸ் 'பேய்'.

கோவை சரளா

கோவை சரளா

முனியின் தொடர்ச்சிதான் காஞ்சனா, காஞ்சனா 2 என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், இந்த மூன்று படங்களின் கதைகள் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாதவையே. லாரன்ஸ் பயந்தாங்கொள்ளி, அவரைப் பேய் பிடிக்கும், அவருக்கு அம்மா கோவை சரளா ஆகிய மூன்று விஷயங்கள் மட்டும்தான் இந்த மூன்று கதைகளிலும் தொடர்ச்சியாக உள்ளது.

சன் பிக்சர்ஸ் - தேனாண்டாள்

சன் பிக்சர்ஸ் - தேனாண்டாள்

இந்தப் படத்தை ராம நாராயணனின் மகன் தனது தேனாண்டாள் பிலிம்ஸ் மூலம் வெளியிடுகிறார். சன் பிக்சர்ஸ் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தை வழங்குகிறது.

English summary
Here is the first look of much anticiopated Ragava Lawrence's Kanchana 2.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil