அதர்வாவின் டிரிக்கர் இன்று ரிலீஸ்… படத்தின் ட்ரெய்லருக்கு சொகுசு கப்பலில் கிடைத்த கவுரவம்!
சென்னை: அதர்வா நடித்துள்ள 'டிரிக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சாம் ஆண்டன் இயக்கியுள்ள டிரிக்கர் படத்தில் அதர்வா ஜோடியாக தான்யா ரவிச்சந்தர் நடித்துள்ளார்.
டிரிக்கர் படத்தின் ட்ரெய்லர் முதன்முறையாக கோர்டெலியா குரூஸ் என்ற சொகுசு கப்பலில் திரையிடப்பட்டுள்ளது. சென்னை: அதர்வா நடித்துள்ள 'டிரிக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
சாம் ஆண்டன் இயக்கியுள்ள டிரிக்கர் படத்தில் அதர்வா ஜோடியாக தான்யா ரவிச்சந்தர் நடித்துள்ளார்.
டிரிக்கர் படத்தின் ட்ரெய்லர் முதன்முறையாக கோர்டெலியா குரூஸ் என்ற சொகுசு கப்பலில் திரையிடப்பட்டுள்ளது.

அதர்வாவின் டிரிக்கர்
மறைந்த நடிகர் முரளியின் மகனான அதர்வா, அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். அதர்வா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'குருதி ஆட்டம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது 'டிரிக்கர்' திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகிறது. டார்லிங், 100, கூர்கா போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த சாம் ஆண்டன், 'டிரிக்கர்' படத்தை இயக்கியுள்ளார். பிரதீக் சக்ரவர்த்தி, ஸ்ருதி நல்லப்பாவின் பிரமோத் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

கவனம் ஈர்த்த ட்ரெய்லர்
அதர்வாவுடன் தான்யா ரவிச்சந்திரன், அருண் பாண்டியன், முனிஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு, 'இரும்புத்திரை', 'ஹீரோ' படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் வசனம் எழுதியுள்ளார். குழந்தைகள் கடத்தலை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள டிரிக்கர் படத்தின் ட்ரெய்லர், சில தினங்களுக்கு முன்னர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. அன்டர் கவர் போலீஸ் ஆபிஸராக நடித்துள்ள அதர்வா ஆக்சனில் மிரட்டியிருந்தார். அவர் நடித்த '100' திரைப்படம் போல டிரிக்கரும் நல்ல கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரிக்கர் ட்ரெய்லருக்கு கவுரவம்
அதர்வாஅப்பாவாக அருண் பாண்டியனும், முக்கியமான கேரக்டரில் சின்னி ஜெயந்தும் நடித்துள்ளனர். முரளியின் பல படங்களில் அவரது நண்பராக நடித்துள்ள சின்னி ஜெயந்த், இப்போது அதர்வாவுடனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. டிரிக்கர் படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்ற 'நெருப்பு மட்டும் வேற ஒண்ண அழிச்சிட்டுதான் வாழும்' என்ற பி.எஸ்.மித்ரனின் வசனம், பலரையும் கவனிக்க வைத்துள்ளது. பிஎஸ் மித்ரன் தற்போது கார்த்தி நடிக்கும் சர்தார் படத்தை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டிரிக்கர் படத்தின் ட்ரெய்லருக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

கோர்டெலியா குரூஸில் ட்ரெய்லர்
அதர்வாவின் டிரிக்கர் இன்று வெளியாவதை முன்னிட்டு, இந்தப் படத்தின் ட்ரெய்லர் கோர்டெலியா குரூஸ் என்ற சொகுசு கப்பலில் திரையிடப்பட்டது. மிகப் பிரம்மாண்டமான சொகுசு கப்பலான கோர்டெலியா குரூஸ்ஸில் முதன்முறையாக தமிழ்த் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பெருமை அதர்வாவின் டிரிக்கர் திரைப்படத்தின் ட்ரெய்லருக்கு கிடைத்துள்ளது. டிரிக்கர் ட்ரெய்லரை பார்த்து ரசித்த ரசிகர்கள், படம் வெற்றி பெற வேண்டும் என படக்குழுவுக்கு கைதட்டி பாராட்டு தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











