90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே 'இந்த' படத்த தான் நிறைய பேர் பார்த்திருக்காங்கப்பா!
ஓவியா நடித்துள்ள 90 எம்எல் திரைப்படம் திரையரங்குகள் நிரம்ப ஓடிக்கொண்டிருக்கிறது.
சென்னை : கடந்த வாரம் ரிலீசான படங்களில் 90 எம்எல் தான் அதிக வசூலை குவித்து வருகிறது.
மார்ச் 1-ஆம் தேதி மொத்தம் நான்கு படங்கள் வெளியாகின. திருமணம், தடம், தாதா 87 மற்றும் 90 எம்எல் தான் அவை.

இந்த நான்கு படங்களில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட படம் 90 எம்எல். பெண் இயக்குனர் அனிதா உதீப் இயக்கியுள்ள இப்படத்தில் ஓவியா மற்றும் நான்கு பெண்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது ஒரு 'ஏ' படமாகும்.
படத்தில் வரும் பெண்கள் குடித்து கும்மாளம் அடிப்பதுடன், இரட்டை அர்த்த வசனங்களில் பேசி கேலி செய்துகொள்ளும் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இது பலரது எதிர்ப்பை சம்பாதித்துள்ளது. விமர்சன ரீதியாக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது.
ஆனால் இப்படம் இன்றைய இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. தியேட்டர்களில் கல்லூரி மாணவர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது. ஆனால் இந்த படத்துக்கு வந்தது வெளியே தெரியாமல் இருக்க, ஆண்களும், பெண்களும் தலையில் முக்காடு போட்டபடியே தியேட்டருக்கு செல்கின்றனர். வெளியில் 'ச்சீச்சீ' என இந்த படத்தை பற்றி பேசினாலும், 90 எம்எல் படத்தை தான் பலரும் பார்த்துள்ளனர்.
சேரனின் திருமணம், அருண் விஜய்யின் தடம், புதுமுகங்களின் தாதா 87 ஆகிய படம் 90 எம்எல்க்கு முன்னாடி மட்டையாகிவிட்டன. இதனால் நல்ல தரமான படங்கள் எடுக்கும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கடும் வேதனையில் இருக்கின்றனர். போகிறபோக்கை பார்த்தால், வருங்காலத்தில் 90 எம்எல் போன்ற படங்கள் தான் அதிகளவில் எடுக்கப்படும் என அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











