லஞ்ச் பிரேக் சந்திப்பின் போது 20 நிமிடம் பேசிய விஜய் - சூர்யா... வெளியான சுவாரசிய தகவல்!
சென்னை: நடிகர்கள் விஜய்யும் சூர்யாவும் தங்களின் திடீர் சந்திப்பின் போது பேசியது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர்கள் விஜய் மற்றும் சூர்யா. தற்போது இருவருமே சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படங்களில் நடித்து வருகின்றனர்.
அதன்படி நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சன் ஸ்டுடியோவில் படப்பிடிப்பு
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சென்னை மற்றும் டெல்லியில் நடைபெற்றது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை பெருங்குடி பகுதியில் உள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சன் ஸ்டுடியோவில் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு ஒரு நாள் நடைபெற்றது.

கடைசிக் கட்ட படப்பிடிப்பு
இதேபோல் நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இந்நிலையில் எதற்கும் துணிந்தவன் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பும் பெருங்குடியில் உள்ள சன் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

லஞ்ச் பிரேக்கில் சந்திப்பு
இருவருக்கும் ஒரே நாளில் ஷூட்டிங் இருந்ததால், சந்தித்துகொள்வார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தத. அப்போது தங்களின் படப்பிடிப்பின் மதிய இடைவேளையில் இருவரும் நேருக்கு நேர் சந்தித்து பேசியதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

20 நிமிடம் சந்திப்பு
இந்நிலையில் இருவரும் சுமார் 20 நிமிடம் பேசிக் கொண்டிருந்ததாகவும் பல்வேறு வேடிக்கையான விஷயங்களை பேசி மகிழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய், சூர்யா இருவரும் பல வருடங்களுக்குப் பிறகு சந்தித்துள்ளனர். இரண்டு டீம்களும் ஒரே இடத்தில் படப்பிடிப்பை நடத்தப் போவதை அறிந்திருந்ததால், மறுநாள் இருவரும் சன் ஸ்டுடியோவில் ஒருவரையொருவர் வரவேற்று கொண்டார்களாம்.

சூர்யா படத்தை பாராட்டிய விஜய்
மதிய உணவு இடைவேளையின் போது சந்தித்த அவர்கள் இருவரும் 20 நிமிடங்களுக்கு மேல் பேசிக் கொண்டிருந்தார்களாம். அவர்கள் பழைய கால நிகழ்வுகளை நினைவு கூர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான சூர்யாவின் படத்தை நடிகர் விஜய் பாராட்டியதாகவும் படத்தை ரசித்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவர்கள் தங்கள் இதயத்திற்கு நெருக்கமான பழைய விஷயங்களைப் பற்றியும் பேசியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











