»   »  ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கன்னட நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற 2 நண்பர்கள்

ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் கன்னட நடிகையை பலாத்காரம் செய்ய முயன்ற 2 நண்பர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் இரவில் வெளியே சென்ற கன்னட நடிகையை அவரது நண்பர்கள் இருவர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனர்.

கன்னட நடிகை ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 32). ஞாயிற்றுக்கிழமை இரவு ராதா தனது நண்பர்கள் சச்சின் மற்றும் பிரவீன் ஆகியோருடன் காரில் வெளியே சென்றுள்ளார்.

காரை பிரவீன் ஓட்டியுள்ளார். இரவு 7.30 மணி அளவில் பிரவீன் ஹெக்கனஹள்ளி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தியுள்ளார்.

ராதா

ராதா

காரை நிறுத்திவிட்டு பிரவீனும், சச்சினும் வெளியே வந்துள்ளனர். விஷயம் தெரியாமல் ராதாவும் காரை விட்டு வெளியே வந்துள்ளார். உடனே அந்த இருவரும் ராதாவின் கைகளை பிடித்து காரின் பின் சீட்டில் தள்ளினர்.

ஓட்டம்

ஓட்டம்

பிரவீன், சச்சினின் எண்ணத்தை புரிந்து கொண்ட ராதா அவர்களின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார். மெயின் ரோட்டுக்கு வந்த அவர் கேப் ஒன்றில் ஏறி காவல் நிலையம் சென்றுள்ளார்.

புகார்

புகார்

காவல் நிலையத்தை அடைந்த ராதா சச்சின் மற்றும் பிரவீன் மீது புகார் அளித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு செல்போன் எண்ணில் இருந்து ராதாவுக்கு அழைப்பு வந்துள்ளது.

ஆபாசப் பேச்சு

ஆபாசப் பேச்சு

கடந்த இரண்டு ஆண்டுகளாக ராதாவுக்கு யாரோ போன் செய்து அசிங்கமாக பேசியதுடன், ஆபாச மெசேஜ்களும் அனுப்பியுள்ளனர். அந்த வேலையை பார்த்தது சச்சின் மற்றும் பிரவீன் தான் என்பது ராதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வரை தெரியாது.

English summary
A Kannada actress has given complaint against two of her friends accusing them of trying to sexually assault her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil