Don't Miss!
- Technology
வெயிட்டான பெர்ஃபார்மென்ஸ் + தரமான கேமரா! இந்த Phone தான் பெஸ்ட் சாய்ஸ்!
- Lifestyle
உங்க கண்களில் இந்த மாதிரி அறிகுறி இருந்தா... அது மாரடைப்பை ஏற்படுத்தும் பிபியோட அறிகுறியாம்..!
- News
எடப்பாடிக்கு அடி மேல் அடி.. அதிமுக அலுவலக சாவியும் கையை விட்டுப் போகுமா? - வந்த ‘நெகட்டிவ்’ சிக்னல்!
- Travel
இயற்கை ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்ட்டில் இருக்கும் ஒரு புதையல் – கர்நாடகாவில் கட்டாயம் பார்க்கவேண்டிய இடம்!
- Finance
பள்ளி-க்கு 30 லட்சம், கல்லூரிக்கு 1 கோடி.. மிடில் கிளாஸ் பெற்றோர்கள் ஷாக்..!
- Automobiles
மோதி பாத்திருவோம்... டாடாவின் வயிற்றில் புளியை கரைக்கும் மாருதி ஆல்டோ கார்! புதிய அவதாரத்தில் நாளைக்கு லான்ச்!
- Sports
ப்ளேயிங் 11ல் 5 ஓப்பனிங் வீரர்கள்.. ஜிம்பாப்வே தொடரில் வித்தியாசமான இந்திய அணி.. இதை கவனத்தீர்களா??
- Education
ஹாய் குட்டீஸ் வாங்க கொடியேற்றலாம்...!
அடுத்த ஆறு மாசம் இத்தனை பெரிய படங்கள் வருது.. இதுல நீங்க எந்த படத்துக்கு மரண வெயிட்டிங்!
சென்னை: கோலிவுட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினி போலத்தான் விழுந்த வேகத்திலேயே பட்டென எழுந்து விடும். இந்த ஆண்டு துவக்கத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முக்கிய நடிகர்களின் படங்கள் சற்றே சொதப்பினாலும், அதிரடியாக கோலிவுட் கம்பேக் கொடுத்து விட்டது.
மற்ற மொழிகளில் எல்லாம் இண்டஸ்ட்ரி ஹிட் என ஒரே ஒரு படத்தை மட்டுமே தூக்கிப் பிடித்துக் கொண்டு சுற்றி வரும் நிலையில், அடுத்தடுத்து கோலிவுட்டில் ரிலீசாகும் அனைத்து படங்களும் தயாரிப்பாளர்களுக்கும் தியேட்டர் உரிமையாளர்களுக்கும் லாபத்தை வாரி வழங்கி வருகின்றன.
இந்நிலையில், முதல் பாதியை விட அடுத்த ஆறு மாசம் மேலும், மிகப்பெரிய படங்கள் கோலிவுட்டில் குவிய உள்ளன அவற்றை பற்றி இங்கே பார்ப்போம்..
அதள
பாதாளத்தில்
பாலிவுட்...அசுர
வளர்ச்சியில்
தென்னிந்திய
படங்கள்...என்ன
காரணம்...ஒரு
சுவாரஸ்ய
அலசல்

இரவின் நிழல்
இயக்குநர் பார்த்திபன் இயக்கி நடித்துள்ள சிங்கிள் டேக் படமான இரவின் நிழல் வரும் ஜூலை 15ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகி உள்ள இந்த படம் ஏகப்பட்ட விருதுகளை குவித்து தமிழ் சினிமாவின் தரத்தை நிச்சயம் உலக அரங்கில் கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாபார ரீதியாகவும் இந்த படத்தை வெற்றிப் படமாக்க வேண்டும் என்கிற முனைப்பில் பார்த்திபன் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சியான் விக்ரமின் கோப்ரா
கமல்ஹாசனின் விக்ரம் படம் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த நிலையில், சியான் விக்ரமின் கோப்ரா வரும் ஆகஸ்ட் 11ம் தேதி தியேட்டர்களை தீப்பிடிக்க வைக்கப் போகிறது. டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படங்களை இயக்கி தமிழ் சினிமா ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் பல கெட்டப்புகளில் இந்த படத்தில் விக்ரம் நடித்துள்ளார். கேஜிஎஃப் ஹீரோயின் ஸ்ரீனிதி ஷெட்டி நாயகியாக நடித்துள்ளார். இரவின் நிழல் படத்தைத் தொடர்ந்து இந்த படத்திற்கும் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசை.

திருச்சிற்றம்பலம்
ஓடிடியில் ஹாட்ரிக் தோல்வியை சந்தித்த நடிகர் தனுஷ் திருச்சிற்றம்பலம் படத்தை எப்படியாவது தியேட்டரில் வெளியிட்டு கம்பேக் கொடுக்க வேண்டும் என வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார். மீண்டும் இணைந்துள்ள தனுஷ் - அனிருத் மற்றும் தனுஷ் - மித்ரன் ஜவஹர் கூட்டணி திருச்சிற்றம்பலம் படத்தை தாறுமாறாக ஹிட் அடிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கர் மகள் அறிமுகம்
இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் மூலம் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார். வரிசையாக நடிகர் கார்த்திக்கு படங்கள் வெளியாக உள்ள நிலையில் அதற்கு பிள்ளையார் சுழி போடப் போகிறது விருமன்.

வெந்து தணிந்தது காடு
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா சரத்குமார் நடித்துள்ள வெந்து தணிந்தது காடு படம் வரும் செப்டம்பர் 15ம் தேதி வெளியாக உள்ளது. ஏ.ஆர். ரஹ்மான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு படம் வெளியாகும் நிலையில், ஓப்பனிங்கே வசூல் அடித்து தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டிப் போடும் அகிலன்
சிம்புவின் வெந்து தணிந்தது காடு படம் ரிலீசாகும் அதே செப்டம்பர் 15ம் தேதி தான் ஜெயம் ரவி, பிரியா பவானி சங்கர் நடித்துள்ள அகிலன் திரைப்படமும் வெளியாக உள்ளது. இருவருக்கும் இடையே பாக்ஸ் ஆபிஸில் பெரிய கிளாஷ் இருக்கும் என்பது கன்ஃபார்ம். சமீபத்தில் வெளியான அகிலன் படத்தின் டீசரும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட எதிர்பார்ப்பு
கமல்ஹாசனின் விக்ரம் படத்தின் வசூல் வேட்டையை வீழ்த்த தகுதியான ஒரே படமாக இப்போதைக்கு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் மீது தான் உள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி உள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 30ம் தேதி திரைக்கு வருகிறது. கோப்ரா விக்ரம், அகிலன் ஜெயம் ரவி, விருமன் கார்த்தி நடிப்பில் உருவாகி உள்ள இந்த படம் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தீபாவளி ரேஸ்
வரும் தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்களும் வெளியாக உள்ளன. இந்த ஆண்டே கோலிவுட் சினிமாவுக்கு ஒரு பொற்காலம் என்று தான் சொல்ல வேண்டும். தொடர்ந்து முன்னணி நடிகர்களின் பெரிய படங்கள் வெளியாகி தியேட்டர்கள் நிரம்பி வழியப் போகின்றன. டாக்டர், டான், வெற்றிகளை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் என்ன பாக்ஸ் ஆபிஸ் மேஜிக் செய்யப் போகிறது என்பதை காணவும் ரசிகர்கள் வெயிட்டிங்.

ஏகே61
ஜூலை 15ம் தேதி நடிகர் அஜித் இந்தியாவுக்கு திரும்ப உள்ளார் என்றும் புனேவில் கடைசி கட்டப் படப்பிடிப்பு நடந்து முடிந்தால், ஏகே 61 திரைப்படமும் சொன்ன தேதியில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படியே தள்ளிப் போனால், டிசம்பருக்கு படம் வந்து விடும் என்கின்றனர். வலிமை படத்தில் விட்டதை ஏகே61 படத்தில் இந்த ஆண்டே அஜித் மீட்க வேண்டும் என்பது ஒட்டுமொத்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு. இதில், நீங்க எந்த படத்துக்கு மரண வெயிட்டிங் என கீழே கமெண்ட் பண்ணுங்க!