விஜய் கேரக்டர் முதல் ரிலீஸ் தேதி வரை… தளபதி 67ல் இருந்து நான்கு Exclusive Updates

சென்னை: விஜய்யின் தளபதி 67 படத்தில் 2 ஹீரோயின்கள், 6 வில்லன்கள் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

விஷால் வில்லனாக, கமல், தோனி ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இதுவரை தளபதி 67 படத்தில் இருந்து 4 முக்கியமான அப்டேட்கள் மட்டும் உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

அப்டேட் கேட்டு தவிக்கும் ரசிகர்கள்

அப்டேட் கேட்டு தவிக்கும் ரசிகர்கள்

2021ம் ஆண்டு வெளியான மாஸ்டரை தொடர்ந்து, இரண்டாவது முறையாக தளபதி 67 படத்தில் விஜய் - லோகேஷ் கூட்டணி இணைகிறது. லோகேஷ் இயக்கத்தில் இந்தாண்டு மார்ச் மாதம் வெளியான விக்ரம், ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்ததால், தளபதி 67 மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், விக்ரம் படத்தைப் போலவே, தளபதி 67ம் மல்டி ஸ்டார்ஸ் படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன்படி விஜய்க்கு வில்லனாக தமிழ், மலையாளம், இந்தி திரையுலகைச் சேர்ந்த டாப் ஹீரோக்கள் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 எக்ஸ்ளூசிவ் அப்டேட்ஸ்

4 எக்ஸ்ளூசிவ் அப்டேட்ஸ்

தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாமே டிசம்பர் மாதம் தான் வெளிவரும் என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார். இந்நிலையில், மிக முக்கியமான 4 அப்டேட்கள் மட்டும் இப்போது உறுதியாகியுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, தளபதி 67 படத்தின் ப்ரீ தியேட்ட பிசினஸ் மொத்தம் 300 கோடிக்கு முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில், ஓடிடி ரைட்ஸை நெட்பிளிக்ஸ் தளம் 160 கோடிக்கு வாங்கியுள்ளதாம். அதேபோல், சாட்டிலைட், இந்தி ரீமேக் உரிமையும் பல கோடிகளுக்கு விலை போயுள்ளதாம்.

சஞ்சய் தத் கன்ஃபார்ம்

சஞ்சய் தத் கன்ஃபார்ம்

தளபதி 67 படத்தில் விஜய்க்கு வில்லனாக விஷால், சஞ்சய் தத், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் நடிக்கவுள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால், இதில் சஞ்சய் தத் மட்டுமே இப்போதைக்கு கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. விஷால், கெளதம் மேனன், பிருத்விராஜ் என மற்ற நடிகர்களிடம் இன்னும் பேச்சுவார்த்தை தான் நடைபெற்று வருகிறதாம். சஞ்சய் தத்தை தொடர்ந்து மற்ற வில்லன் நடிகர்களின் லிஸ்ட்டும் சீக்கிரமே கன்ஃபார்ம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, தளபதி 67 படத்தில் கமல்ஹாசனை ஒரு கேமியோ ரோலில் நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முடிவு செய்துள்ளாராம் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் கேரக்டர் இதுதான்

விஜய் கேரக்டர் இதுதான்

தளபதி 67 படத்தில் விஜய் மும்பை கேங்ஸ்டராக நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால், இதில் விஜய் கேங்ஸ்டர் கேரக்டரில் நடிப்பது மட்டுமே கன்ஃபார்ம் ஆகியுள்ளதாம். அது மும்பை கேங்ஸ்டர் தானா என படக்குழு இன்னும் முடிவு செய்யவில்லையாம். அதேபோல், விஜய் மட்டும் கேங்ஸ்டர் ரோலில் நடிக்கவில்லையாம். படத்தில் இன்னும் எதிர்பார்க்க முடியாத சில கேங்ஸ்டர் கேரக்டர்களை லோகேஷ் கனகராஜ் வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த கேரக்டர்களும் விஜய்க்கு செம்ம டஃப் கொடுக்கும் விதம் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

தளபதி 67 ரிலீஸ் தேதி?

தளபதி 67 ரிலீஸ் தேதி?

தளபதி 67 படத்தின் கதை, திரைக்கதை வேலைகள் முடிந்ததோடு, லொக்கேஷன், ஷெட்யூல் எல்லாமே பக்காவாக முடிவாகி விட்டதாம். அதனால், விஜய் படப்பிடிப்புக்கு வந்ததும், 6 மாதங்களுக்குள் மொத்த ஷூட்டிங்கையும் முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ஷூட்டிங் முடிந்துவிட்டால், தளபதி 67 படத்தை அடுத்தாண்டு பூஜை விடுமுறை அல்லது தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளார்களாம். படப்பிடிப்பு தாமதமானால், அதற்கேற்றவாறு ரிலீஸ் தேதியை மாற்றிக்கொள்ளவும் விஜய் சம்மதம் தெரிவித்துவிட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனால், விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X