»   »  ஜி.வி.பிரகாஷின் புரூஸ்லீ பூஜையுடன் தொடங்கியது

ஜி.வி.பிரகாஷின் புரூஸ்லீ பூஜையுடன் தொடங்கியது

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிக்கும் புரூஸ்லீ திரைப்படம் இன்று பூஜையுடன் தொடங்கியது.இதனை ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருக்கிறார்.

இயக்குநர் பாண்டிராஜ் "புரூஸ்லீ படத்தில் ஜி.வி.பிரகாஷின் தோற்றம் நன்றாக இருக்கிறது, படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள். எனது உதவியாளர் பிரசாந்த் பாண்டிராஜிற்கு நிறைய அதிர்ஷ்டம் கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று படக்குழுவினரை வாழ்த்தியிருக்கிறார்.


இயக்குனர் பாண்டிராஜின் உதவியாளர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கும் ‘புருஸ்லீ' படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக கீர்த்தி கர்பந்தா நடிக்கிறார். தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ள கீர்த்தி கர்பந்தா தமிழில் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.


G.V.Prakash Kumar Next Project

புரூஸ்லீ படத்தின் படப்பிடிப்புகளை விரைவாக முடித்து அடுத்த வருடம் காதலர் தினத்திற்கு படத்தை வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிப்பதற்கு சமந்தா, நயன்தாரா, எமிஜாக்சன் ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்பட்ட நிலையில் கடைசியாக கீர்த்தி கர்பந்தா நாயகியாக நடிக்கிறார்.போனி என்ற தெலுங்கு படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான கீர்த்தி கர்பந்தா,இதுவரை 20-க்கும் அதிகமான தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


English summary
After Trisha illana Nayanthara Huge hit G.V.Prakash's Next Project Started Today. "BruceLee Pooja today With all ur wishes and blessings" Says G.V.Prakash Kumar.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil